மட்டக்களப்பு– கல்முனை பிரதான வீதி காத்தான்குடி நகரில் மஞ்சள் கோட்டுக் கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பப் பெண் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த காத்தான்குடி 06ஆம் குறிச்சியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை மாலை 5 மணியளவில் காத்தான்குடி-06, பிரதான வீதி மௌலானா பள்ளிவாயலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment