19 May 2016

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க பதில் இராஜாங்கச் செயலாளருடன் சந்திப்பு.

SHARE
ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் “ஆர்மிடேஜ் சர்வதேசம்” என்ற அமைப்பின் ஸ்தாபகர் முன்னாள் அமெரிக்க பதில் இராஜாங்கச் செயலாளர் ரிச்N;சர்ட் எல். ஆர்மிடேஜ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (17) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் தற்கால அரசியல் நிலைமை, உத்தேச தேர்தல் சீர்திருத்தம், புதிய அரசியலமைப்பு, நாட்டில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் நலன்கள் என்பவற்றை மையப்படுத்தியதாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாட்டில் நல்லாட்சி நிலவும் சூழ்நிலையில் காணப்படும் முன்னேற்றகரமான அம்சங்கள் அபிவிருத்தி நடவடிக்கைக என்பன தொடர்பில் அறிந்து கொள்வதில் ஆர்மிடேஜ் அதிக ஆர்வம் செலுத்தினார்.

இச் சந்திப்பில் பிரதியமைச்சர் பைசால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், எம்.எச்.எம்.சல்மான், கல்முனை மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பர், முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் ஊடகச் செயலாளர்
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபிஸ் தெரிவித்துள்ளார்.




SHARE

Author: verified_user

0 Comments: