ஈழ வள நாட்டின் மட்டுமா நகரின் தென்பால் பல வளங்களாலும் சிறப்புற்று விளங்கும் திருவூராம் பெரிய கல்லாறு என்னும் திவ்விய பதியில் வங்கக் கடலின் அரவணைப்பில் அமர்ந்து பேரொளியாக அடியார்களுக்கு அருட்சக்தியாக அருள்பாலிக்கும் அன்னை கடல் நாச்சியம்மனின்
வருடாந்த வைகாசித் திருச்சடங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட் கிழமை இரவு திருக்கதவு திறத்தல் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் 24 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை வங்கக் கடலில் கும்பம் சொரிதலுடன் வருடாந்த உற்சவமானது இனிதே நிறைவு பெறவுள்ளது.
கிரியா கால நிகழ்வுகளாக பாற்குட பவனிஇ வட்டுக்குத்தல்இ பெரிய கல்லாறு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து கடல் நாச்சி அன்னையின் முகக்களை தாங்கிய பேழை மிகக் கோலாகாலமாக எடுத்து வருதல்இ மடை வாங்குதல்இ பாளை விற்றல்இ பூரண கும்பம் நிறுத்துதல்இ அங்கப் பிரதட்சணம் செய்தல்இ நேர்த்திக்காக ஆராத்தி எடுத்தல்இ பிள்ளை விற்று வாங்குதல், நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. கிரியைகள் யாவும் ஆலய பூசகர் செ.ஜெயரெட்ணம் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment