26 May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி

SHARE
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திட்டிப் பேசியமையைக் கண்டித்து
மட்டக்களப்பு நகரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி காந்தி பூங்காவுக்கு முன்பாகச் சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகச் சென்று முடிவடைந்தது. 

கடற்படை அதிகாரியை பேசியதாகக் கூறப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது
SHARE

Author: verified_user

0 Comments: