18 May 2016

காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகிவரும் இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் மாபெரும் சிரமதானம

SHARE

(பழுவுரான்)


காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகிவரும் இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் மாபெரும் சிரமதானம
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டு யானைத்தாக்குதலுக்குள்ளாகிவரும் இளைஞர் விவசாயத் திட்டம் எனும் கிராமத்தில் செவ்வாய்க் கிழமை (17) மாபெரும் சிரமதானம் ஒன்று முன்னெடுக்கப் பட்டிருந்தது. அக்கிராமத்தில் பற்றைக்காடாய்க் கிடந்த பொது விளையாட்டு மைதானம், வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலய வளாகம், என்பன சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.

அக்கிராம பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்விவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) உட்பட பலர் கலந்துகொண்டு இச்சிரமதானப் பணியினை முன்னெடுத்திருந்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: