30 May 2016

ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதருக்கு மருதமுனையில் பாராட்டு விழா

SHARE
(டிலா )

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரை பாராட்டிகெளரவித்த விழா (28) மருதமுனை பொதுநூலக கட்டிடத்தில் ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தர் கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெற்றது.
கவிஞர்
ஜமீலுடைய வரவேற்புரையோடு ஆரம்பமான விழா இறுதிவரைக்கும் எல்லாமே எல்லாமாகவே இருந்தது. பத்திரிகையாளர் காதரை நேசிக்கின்றவர்கள், காதர் நேசித்தவர்கள், இரத்த உறவுகள் என்று பலர் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர்.

மருதமுனை ஹஸன் தனது தலைமை உரையில் ஊடக ஒழுக்க அறநெறிகளோடு பி.எம்.எம்.ஏ காதர் பயணித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'தென்னிந்திய ராகத்தின் இரண்டாவது பாடலுக்கு' என்ற கவிதையையும் தந்தார். பின்னரான விஜிலியின் கவிதையும் காதரை திரும்பிப்பார்க்க வைத்தது.

நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்பட்ட 'தீரா-மை' மலர் வந்தவர்களால் வரவேற்கப்பட்டது.

மலருக்கு மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ், ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதி இராஜநாயகம், தினகரன் பிரதம ஆசிரியர் க.குணராசா, மெட்ரோநியூஸ் முன்னாள் இணை ஆசிரியர் சூரன்.ஏ. ரவிவர்மா, விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் போன்றோரது ஆசிஉரைகள் மலரை கனதியாக்கினாலும் மலருக்கு வைத்த பெயர் 'தீரா-மை' எல்லோருக்கும் பிடித்திருந்தது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அஹமட் பிறப்பு முதல் இறப்பு வரையிலான காதரின் வரலாற்று பதிவுகளை உரையாகதந்தார். ஏன்? பாராட்ட வேண்டும் என்பதற்கான விடையையும் தந்தார்.

இடையிடையிலே காதருக்கு வழங்கிய கெளரவிப்புக்கள் காதருக்கு மட்டுமல்ல வந்திருந்த எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம்.பை
றூஸ் உடைய உரை ஆசிரியருக்கும் - மருதமுனைக்கும் இருந்த உறவை கோடிட்டு காட்டியது. காதரின் சேவையை விடிவெள்ளி பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் பாராட்டினார்.

பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவின் ஆய்வுரீதியிலான பார்வை ஊடகத்துறையில் பயணிக்கின்றவர்களுக்கு உரமாக இருந்தது. ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை தொட்டுச் சென்றார். இடையிடையிலே இறுக்கிக் கட்டவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுபோல் இருந்தது..

பேராசிரியரின் உரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பு சேவையான  பிறை எப்.எம் வானொலியில் நேரடி அஞ்சல் செய்ய அறிவிப்பாளர்களான பசீர் அப்துல் கையும், ஏ.எல்.எம்.ஸினாஸ் ஆகியோர் ஒழுங்கு செய்தமை நிகழ்வை இன்னும் கனதியாக்கியது.

இறுதியில் காதரின் ஏற்புரை கண்ணீர் துளிகளால் வடிந்த வார்த்தைகளாக மாறியது. இது எல்லோரையும் சில நிமிடம் கலங்க வைத்தது. எனது மண்ணில் எனக்கு கிடைத்த கெளரவத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றேன். மரணம் தூரமானால் 'சுயம்' என்ற புத்தகத்தில் இன்னும் பல பதிவுகளோடு சந்திப்பேன் எனக் கூறினார். பி.எம்.எம்.ஏ.காதர்' என் உள்ளத்திலிருந்து...' என்ற மனப்பதிவை மனத்திருப்தியோடு வெளியிடாக தந்தார். ஆசிரியரும் கவிஞருமான ஏ.எம். குர்சித்துடைய நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது.




















SHARE

Author: verified_user

0 Comments: