12 May 2016

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் நிருவகிக்கப்படும் கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சுகாதாரப் அலுவலகத்துடன் இணைக்க எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு.

SHARE
மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நிருவகிக்கப்பட்டு வரும்  கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுடன் இணைப்பதற்கு சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ள முடிவுக்கு தமது அமைப்பு ஆட்சேபனை தெரிவிப்பதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் புதன்கிழமை (11.05.2016) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரிடம் ஆட்சேபனைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த ஆட்சேபனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக  ஏறாவூர் நகர பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினால் மீராகேணி, மிச்நகர், ஐயன்கேணி ஆகிய கிராமங்கள் சுகாதாரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தக் கிராம சேவகர் பிரிவுகளை ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை நிருவாகத்திற்குள் இணைப்பதற்கான முயற்சிகளில் மாகாண சுகாதாரத் திணைக்களம் ஈடுபட்டுள்ளதை நாம் ஆட்சேபிக்கின்றோம்.


இந்தப் பிரதேசங்கள் திடீரென தகுந்த காரணங்களின்றி ஏறாவூர்ப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்படுமாயின் பிரதேச மக்கள் போக்குவரத்து உட்பட பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

எனவே, பிரதேச மக்களின் நலன் கருதி ஏறாவூர் நகர சுகாதார அதிகாரிப் பிரிவு நிருவாகத்தின் கீழுள்ள கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சகாதாரப் பணிமனை நிருவாகத்தின் கீழ் இணைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளைக் கைவிட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் தலைவர் யூ.எல். முஹைதீன் பாவா தலைமையிலான நற்பணி மன்றமும் இந்த விடயம் குறித்து ஆட்சேபனை தெரிவித்து புதன்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டதோடு முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: