(க.விஜி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.களுவாஞ்சிகுடி விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராம விவசாயிகளால் செய்கைபண்ணப்பட்ட 620ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தரவைமுன்மாரிக் கண்டம், குளவெளிக்கண்டம், மேட்டு வட்டைக்கண்டம், வண்ணனான் வெளிக்கண்டம், கரையாவெளிக்கண்டம், ஆகியன மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தரவை முன்மாரிக்கண்டத்தில் 70 ஏக்கரும், குளவெளிக்கண்டத்தில் 30 ஏக்கரும், வண்ணனான் வெளிக்கண்டத்தில் 130 ஏக்கரும்,மேட்டுவட்டைக் கண்டத்தில் 350 ஏக்கரும், கரையாவெளிக்கண்டத்தில் 40 ஏக்கருமாக மொத்தம் 620ஏக்கர் வேளான்மை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுப்பதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகள், அரசியல்வாதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வண்ணணான் வெளிக்கண்ட விவசாய கமல அமைப்பின் பொருளாளர் தி.கோகுலராஜ் தெரிவித்தார்.
தரவை முன்மாரிக்கண்ட விவசாயி முருகேசு-புஸ்கரன் குறிப்பிடுகையில் நான் வங்கியில் கடன்பெற்று வேளாண்மை செய்திருக்கின்றேன். வேளாண்மை பாரியசேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடனை மீண்டும் செலுத்த முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் எனக்குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment