15 May 2016

இலங்கையில் 6வது எழுச்சிக் கிராமம். ஏறாவூர்ப்பற்று மைலம்பாவெளியில் 25 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

SHARE
(எச்..ஹுஸைன்)

எழுச்சிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று மைலம்பாவெளியில் கட்டி முடிக்கப்பட்ட 25 வீடுகள் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸவினால் ஞாயிறன்று (15.05.2015) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இது வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிரமாணிக்கப்பட்ட இலங்கையின் 6 வது எழுச்சிக் கிராமமாகும்.

இவ்வீடுகளுக்கான அடிக்கல் கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியினால் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான குடியிருப்பாளர்களுள் ஒவ்வொருவருக்கும் அரச காணி 15 பேர்ச்சஸ் வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டதுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இவ்வீடுகளை நிருமாணிப்பதற்காக கடன் நிதி உதவியையும் வழங்கியிருந்தது.

நிகழ்வில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸ, கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் பயனாளி;க் குடும்பங்கள், உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: