12 May 2016

கிழக்கில் 500 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமையவிருக்கும் விஞ்ஞான தொழினுட்ப பூங்கா மூலம் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு

SHARE
கிழக்கு மாகாணத்தில் 500 மில்லியன் ரூபாய் முதலீட்டில் விஞ்ஞான தொழினுட்ப பூங்கா அமைக்கப்படவிருக்கின்றது. இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடியும் என கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்தள்ள இந்திய முதலீட்டாளரான ஏ.என். பத்திரிநாத்A.N. Badrinath, Director, Business Development, Phoenix Informatrix Private Ltd., Bangalore புதனன்று 11.05.2016 தெரிவித்தார்.
இது விடயமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபையின் ‘கிழக்கின் முதலீடு’ திட்டத்திற்கமைய, சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பூங்கா ஊடாக சுமார் 50,000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்ட ‘கிழக்கு முதலீடு-2016′என்ற ஒன்றுகூடலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் அடிப்படையில் விஞ்ஞான தொழில்நுட்ப பூங்காவை சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்க இருக்கின்றோம்.

இதனை நிறைவேற்றுவதற்கு மூன்று தொடக்கம் நான்கு வருடங்கள் தேவைப்படும். அவ்வாறு பூர்த்தி செய்யப்படுகின்றபோது, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50,000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றோம்.

இங்கே தொழில்நுட்ப மையத்தினை மட்டுமல்லாது சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றினையும் விருத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்பத் திறனை விருத்தி செய்யும் பொருட்டு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றினையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்தக் கல்லூரியானது உள்ளுர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என்பதுடன் எதிர்காலத்தில் பொருளாதார அபிவிருத்திக்கும் உலகமயமாதலுக்கும் உதவியாக அமையும் என நம்புகின்றோம்.

மேலும், இந்த தொழினுட்ப பூங்கா திட்டமானது நிறைவேற்றப்படும்போது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும்.
குறித்த திட்டத்தில் தாங்கள் ஈடுபடுவதற்கு கிழக்கு மாகாண சபையினதும் அதன் முதலமைச்சரினதும் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே ஊக்கமாக அமைந்திருக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: