31 May 2016

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று இயங்கவில்லை.

SHARE

(டிலா )

நாடுதழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் இன்று(31) சுகாதார துறையில் அரசியல் தலையீடுகளை தடுக்கக்கோரி காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரைக்கும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் நோயாளர்கள் மருத்துவ சிகிக்சைகளை பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர். பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. எனினும் அவசர சிகிச்சை பிரிவு, விடுதிப் பிரிவுகள், மகப்பேற்று பிரிவு, இரத்த வங்கி போன்ற பகுதிகள் வழமை போன்று இயங்கியதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஆர். முரளிஸ்வரன் தெரிவித்தார். 

இதேவேளை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்ப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவை போன்றன நடைபெறவில்லை. இதனால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றதை காணமுடிந்ததது.




SHARE

Author: verified_user

0 Comments: