இவ்வருடத்திற்குள் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லையாயின் 2017.01.01 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள 2 பிரதான கட்சிகளுக்கும் எதிரான செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என எமது கட்சிக்கு கருத்தினையும் முன்வைக்கின்றேன்.
கடந்த ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு மே 18 முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தினரால் பெரும் தொகையான எமது அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்நாளை எம்மாhல் மறக்கவோ மறைக்கவோ முடியாது. அப்போது நடைபெற்றது போர் அல்ல அங்கு நடைபெற்றது ஓர் கிளர்ச்சியாகும். அந்தக் கிளர்ச்சிக்குத் தீர்வு காண்பதற்காக பெரும் தொகையான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளர்.
வாழைச்சேனை பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்த தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி புதன் கிழமை (17) மாலை விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
யுத்தத்தில் ஈடுபட்படவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். எங்கள் நாட்டு மக்களையே நாங்கள் கொன்றுவிட்டு நாம் யுத்த வெற்றி கொண்டாடலாமா என அண்மையில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சொற் பதத்தைத் தெரிவித்து கருத்துத் தெரிவித்த அந்த செயலாளரை அதற்காக வேண்டி நான் பாராட்டுகின்றேன்.
2009 மே 18 ஆம் திகதி எமது மக்களைக் கொன்று குவித்துவிட்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2009 மே 17 ஆம் திகதி மண்ணை முத்தமிட்ட மிகக் கேவலமான வரலாறு இந்த மண்ணுக்கு இருந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களைக் கொன்றுவிட்டு மண்ணை முத்தமிட்ட ஜனாதிபதி என்றால் அது மஹிந்த ராஜபக்ஸதான். அந்த பாவங்களைத்தான் அவரும் அவரது குடும்பங்களும், அவரது உறவுகளும், சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த திட்டமிட்ட இனப்படுகொலை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடையமாகும். இதில் ஈடுபட்ட குற்றவாளிக்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள்கூட எமது இனத்திற்கு நடந்தவற்றை ஓர் இனப்படுகொலை என்று சொல்வதற்கு வெட்கப் படுகின்றார்கள். அவ்வாறு இனப்படுகொலை நடைபெறவில்லை என்றும் கூறுகின்றார்கள். அவ்வாறானவர்கள் வடக்கு கிழக்கு மண்ணில் கடந்த காலங்களில் வசித்திருந்தால் தெரியும் இங்கு நடைபெற்றது இனப்படுகொலையா, இனச் சுத்திகரிப்பா என்று.
எமது இனத்திற்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைகளை உள்ளக விசாரணையாகக் கொண்டுவருவதற்கு தற்போது அரசு முன்வந்துள்ளார்கள்.
இந்நிலையில் அப்போதைய காலத்தில் கைது செய்யப்பட்ட எமது உறவுகள் தற்போதும் சிறையில் வாடுகின்றார்கள். எமது அப்பாவி மக்களை சிறைக்குக் கொண்டு சென்றவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். எனவே சிறையிலுள்ள எமது உறவுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல வேதனைகளோடு அலைந்து திரிகின்றார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு நாங்களும் பங்காளிகள் என்ற ரீதியில் இந்த அரசு எமது மக்களுக்குரிய நீதியான தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும.
இவ்வருடத்திற்குள் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லையாயின் 2017.01.01 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள 2 பிரதான கட்சிகளுக்கும் எதிரான செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என எனது கட்சிக்கு கருத்தினையும் முன் சை;ககின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment