5 May 2016

அன்வர்தீன் அரங்கில் நடைபெற்ற ' ஷம்ஸ் தினம் - 2016 ' நிகழ்வு

SHARE
(டிலா )

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் தற்போதைய அதிபருமான எஸ்.எம்.எம்.அமீர் வேண்டுகோள் விடுத்தார். ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த 'ஷம்ஸ் தினம் - 2016' விருது வழங்கல் நிகழ்வு (30) பாடசாலையின் அன்வர்தீன் அரங்கில் நடைபெற்றது.இங்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் சேவையாற்றி வருகின்றனர்.தனிப்பட்ட முரன்பாடுகளை களைந்து பாடசாலையின் அபிவிருத்தியில் பங்கெடுக்க ஒன்றிணைய வேண்டும். உங்கள் பிள்ளைகளை இந்தப் பாடசாலையில் சேர்க்க வேண்டும். பாடசாலையின் பழையமாணவரான மாவட்ட திட்டமில் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீனுடைய முயற்சியால் இந்த அரங்கு எமக்கு கிடைத்தது. அவரை பாடசாலை சமூகம் பாராட்டுவதோடு இன்றிலிருந்து இந்த அரங்கு 'அன்வர்தீன் அரங்கு' என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் எனவும் கூறினார்.

நிகழ்வில் தேசியக் கொடியினை பாடசாலையின் பழைய மாணவனும் வவுனியா மாவட்ட நீதிபதியுமான ரி.எல்.அப்துல் அப்துல் மனாப் இயற்றி வைத்தார். பாடசாலைக் கொடியினை அதிபரும் பழைய மாணவர் அமைப்பின் கொடியினை அமைப்பின் உப தலைவரும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளருமான எம்.எஸ்.சஹ்துனுல் நஜீம் இயற்றி வைத்தார்.

நிகழ்வின் வரவேற்புரையை டாக்டர் ஏ.பி.எம்.அஹமது வாஜித் நிகழ்த்தினார். நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் நீடித்த ஷம்ஸ் தின நிகழ்வில் 2015ம் ஆண்டு சாதனை படைத்த முதன் நிலை மாணவர்கள், தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள், தற்போது ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என 200 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்லார், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பீடாதிபதி எஸ்.எம்.ஜுனைத்தீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி உட்பட பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், நிருவாக உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், ஓய்வுநிலை உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என 1500க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மருதமுனைக் கமாலின் இஸ்லாமிய கீதம் பார்வையாளர்களின் மனதை தொட்டதுடன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் பெக்ஸ் இயந்திரம் ஒன்றை அதிபரிடம் கையளித்தார். வருட இறுதிக்குள் ஒரு மில்லியன் ரூபா செலவில் சில வேலைத்திட்டங்களை செய்து தருவதாகவும் அங்கு உறுதியளித்தார்.
பாடசாலையின் பழைய மாணவர் உறுதி மொழியும் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்வுகளை பழைய மாணவர்களான பிறை FM நிலையக் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம், அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆகியோர் தொடுத்து வழங்கினார்கள்.









SHARE

Author: verified_user

0 Comments: