19 May 2016

கடலுக்கு சென்ற நிலையில் 20 நாட்களாகியும் தமது வீடுகளுக்கு வந்து சேரவில்லை

SHARE
திருகோணமலை மாவட்டம் திருக்கடலூர் மற்றும் பள்ளத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு மீனவர் கடலுக்கு சென்ற நிலையில் இன்றுடன் 20 நாட்களாகியும் தமது வீடுகளுக்கு வந்து சேரவில்லை இவர்கள் கடலுக்கு சென்ற படகுகினை கடலில் கண்டு மீட்ட போதும் இவர்களின் தகவல் தெரியாத நிலையில் தேடி வரும் பெற்றோர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் மோகனதாஸ் சஜந்தன் (வயது-24) திருக்கடலூர் பத்திரகாளி அம்பாள் மினவர் சங்க அங்கத்தவர் மற்றையவர் உலகநாதன் குமரேஸ் (வயது-23) பள்ளத்தோட்டம் பாலமுருகள் மீனவர் சங்க அங்கத்தவர்  

சம்பவம் தொடர்பாக காணமல் போன மோகனதாஸ் சஜந்தனுடைய தந்தையான ஆறுமுகம் மோகனதாஸ் இவ்வாறு தெரிவிக்கிறார்.கடந்த மாதம் 27ம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற எனது மகனும் அவருடைய நண்பரும் வழமையாக காலை 6 மணிக்கு சென்றால் மாலை 8 மணிக்கு முன்னர் கரைக்கு திரும்பி விடுவார்கள் சம்பவ தினத்தன்று நேரம் தாமதமாக அவர்களுக்கு தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை எனவே அவர்கள் வழமையாக தொழிலுக்கு செல்லும் முல்லைத்தீவு கடற்பரப்பில் உள்ள மின்வர்களின் உதவியுடன் தேடிய போது அவர்கள் சென்ற படகுகள் மட்டும் மீட்கப் பட்டது.


தொழிலுக்கு சென்ற இருவரும் காணவில்லை எனவே இவர்களை யாரேனும் பாதகாப்பு பரிவினர் கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையினரின் பொலிசார் போன்றவற்றுடன் இணைந்து தேடி வருகின்றோம்.இவ்விடயம் தொடர்பாக தேடிவருவதாக பாதுகாப்பு பிரிவிடம் இருந்தும் கடிதங்கள் எமக்கு வந்துள்ளது.என அவர் தெரிவித்தார்


SHARE

Author: verified_user

0 Comments: