கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு கிராமத்தில் வைத்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை 4.50மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரசடித்தீவில் உள்ள கல்வி நிலையத்திற்கு பிரத்தியேக வகுப்பிற்காக சென்ற மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் தந்தை தெரிவிக்கையில் அக்கரைப்பற்று கிராமத்தினை சேர்ந்த தாங்கள் தொழில் நிமிர்த்தம் காரணமாக அரசடித்தீவில் வசித்துவருவதாகவும் இந்நிலையில் வகுப்புக்கு சென்ற தனது பிள்ளை 43வயதினை உடைய அக்கரைப்பற்று கிராமத்தினைச் சேர்ந்த ஒருவரால் கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment