மட்டக்களப்பு நகரில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் “பாடுமீன்களின் சமர்” பிக்மட்ஸ் எதிர்வரும் (14.5.2016)ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30முதல் மாலை 6.00 வரை கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகிய இரண்டு அணிகளுக்கிடையிலான அணியே இவ்வாறு மோதிக்கொள்கின்றன.இதற்கான களப்பயிற்ச்சினை விளையாட்டுவீரர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தேசிய அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முழுமையான அனுசரணையின் மூலம் "பாடுமீன்சமர்" நடைபெறவுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,வலயக்கல்விப்பணிப்பாளர்,கணக்காளர்,வங்கி முகாமையாளர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்கள்,பழையமாணவர்கள்,கலந்து கொள்ளவுள்ளார்கள்
0 Comments:
Post a Comment