3 May 2016

வாகரையில் 10 வறிய குடும்பங்களுக்கு கோழிவளர்ப்புக்காக 3 இலட்ச ரூபாய் சுயதொழில் கடனுதவி

SHARE
வாகரை மீனவர் சமூகநல அமைப்பினரால் வாகரை பிரதேசத்தில்; பத்து வறிய குடும்பங்களுக்கு
திங்களன்று 02.05.2016 கோழிவளர்ப்புக்காக சுயதொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஆலோசகர் வேலாயுதம் உதயராஜ் தெரிவித்தார்.

வாகரை மீனவ சமூகநல அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர் சங்கத்தின் ஊடாக இந்த உதவி கிடைத்துள்ளது.

பயனாளிகளுக்கு முட்டை இடும் நல்லின கோழிக்குஞ்சுகள் தலா 30, அதற்கான தீன் பாத்திரங்கள் என்பன வழங்கப்பட்டன.

3 மாத காலத்தில் கோழிக் குஞ்சுகள் வளர்ந்து முட்டையிடத் தொடங்கியதும் அந்த வருமானத்தைக் கொண்டு மேற்படி மீனவர் சங்கத்திற்கு சிறு தொகையாக இக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஊக்கமுள்ள உற்பத்தியளார்கள் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்;நிகழ்வில்  வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர். இராகுலநாயகி கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான சமூக சேவையாளர் என். மோகனதாஸ் வறிய குடும்பங்களுக்கான இந்த கோழி வளர்ப்புத் திட்டத்திற்கு சுமார் 3 இலட்ச ரூபாய் நிதியை வழங்கியுள்ளார்.
வாகரைப் பிரதேசத்தில்  கட்டுமுறிவு தொடக்கம் பனிச்சங்கேணி வரையில் உள்ள பல பாடசாலைகளுக்கும். கல்வியில் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கும். தொண்டராசிரியர்களுக்கும் சமூக ஆர்வலரான மோகனதாஸ் உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: