மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எனக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்தமையானது எனது கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரான செல்வக்குமார் நிலாந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் மட்டக்களப்பு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து நான் பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்றேன்.
என் மீது சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அங்கு என்னை பொலிசார் அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடுமாறும் அவரிடம் மன்னிப்பு கோருமாறு பலதடவைகள் வற்புறுத்தியும் அதற்கு நான் மறுப்புத்தொரிவித்து விட்டேன் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சொன்னார்கள் நான் வழக்கு தொடருங்கள்.
என்மீது எந்தத்தவரும் இல்லை என்றும் நான் குறித்த கட்டுரையை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்தே எழுதினேன் என்றும் அது அரசாங்க அதிபருக்கு அவமானமாகவோ அல்லது தவறாகவோ இருப்பின் அது குறித்த மறுப்பு அறிக்கையை எனது கட்டுரை வெளியான ஊடக நிறுவனத்திற்கு அனுப்புங்கள்.
அதனை அந்த ஊடக நிறுவனம் பிரசுரிக்க தவறினால் அந்த நிறுவனத்திற்கு எதிராக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருக்க வேண்டமென்றும் அதைவிடுத்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு கூறியது எந்தவகையில் நியாயமானது.
அரசாங்க அதிபரின் இந்த செயற்பாடானது எனது கருத்துச்சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நான் கருதுகின்றேன்.
அதன் ஊடாக நானும் எனது குடும்பமும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் எனது பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
காரணம் மாவட்ட அரசாங்க அதிபர் என்றவகையில் மாவட்டத்தில் பொலிசார் உட்பட அனைவரும் அவரது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே நடப்பார்கள்.
எனவே என்னை அவர்கள் எந்தவகையிலும் பழிவாங்க கூடும். எனவே எனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படவேண்டும் என்று தனது வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்தார்.
(tx tw)
0 Comments:
Post a Comment