எமது ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின் உறுப்பினர் விக்னேஸ்வரன் எனும் கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவர் அண்மையில் மரணமடைந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது
தகவல்கள் வெளி வந்துள்ளன. இருந்த போதிலும் அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கின்றது.
என ஐக்கிய கிராம சேவை உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.ஞானசிறி தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக் கிழமை (29) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னால் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
அபிவிருத்தி ஒழுங்காக நடைபெற வேண்டுமாக இருந்தால் அரச அதிகரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். ஆனால் எமது அதிகரி ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தினபோரில் கைத்து செய்யப்பட்டவர்களை நாம் இதுவரை எந்த ஊடகங்களிலும் நாம் காணவில்லை.
பொலிஸ் நிருவாகம் கொண்ட அதிகாரி, சமாதான நீதவான், அனைவருக்கும் பதில் சொல்லக்கூடிய அதிகாரி, இலங்கையின் நிருவாகச் சக்கரத்திலே அடிமட்டத்திலே இருக்கின்ற நிறைந்த ஒரு அதிகாரியன ஒருவர்தான் கொல்லப்பட்டுள்ளார்.
இவரது உடல் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரட்பட்டது. அந்த வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இன்மையினால் எமக்கு 4 நாட்களின் பின்னரே பிரேதம் கிடைத்தது. அரசியல் வாதிகள் களுவாஞசிகுடி ஆதார வைத்தியசாலைக்கு முறையான ஓரு சட்ட வைத்திய அதிகாரியை நியமிக்கத் தவறியுள்ளார்கள்.
இவற்றிற்கு மேலாக அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம் அங்கும் சட்ட வைத்திய வைத்திய அதிகாரி இன்மையினால் நாங்கள் பல இன்னல்களை எதிர் கொண்டு பின்னர் அரசாங்க அதிபர் ஊடாக எமது சங்கம் மேற்கொண்ட பிரயத்தனத்தின் பின்னர் அங்கிருந்து 4 நாட்களின் பின்னர்தான் சடலம் எமக்குக் கிடைத்தது. எனவே அரச அதிகாரிக்கு இவ்வாறான நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்ன, இவற்றின் மர்மன் என்ன என்பது எமக்குத் தெரியாதுள்ளது. எனவே மட்டக்களப்பபு போதனா வைத்திய சாலை ஒரு சட்ட வைத்திய அதிகாரியில்லாமல் இருப்பதையிட்டு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது உத்தியோகஸ்தரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக நாம் உணருகின்றோம் இந்த மர்மத்தை தீர்த்து வைக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளில் ஒன்று.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனிடம் இவ்விடையம் தொடர்பில் மகஜர் ஒன்றும் சமர்ப்பித்தோம், ஆனால் இதுவரையில் எமக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து எமது கிராம உத்தியோகஸ்தரின் மரணத்திற்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment