19 Apr 2016

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கிராமங்கள் தோறும் அபிவிருத்திக் குழு நியமனம்

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 17 கிராமங்கள் தோறும் கிராம அபிவிருத்திக் குழுக்களை நியமிக்குமாறு கிழக்கு மாகாண
முதலமைச்சரின் ஆலோசனைக்கமைவாக கிரம அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எம். ஸரூஜ் தெரிவித்தார்.

பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட அரசியல் கலப்படமற்ற புத்திஜீவிகள் குழுவொன்று பிரதேச செயலாளர் பிரிவில் பொதுவாகவும் மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கென்றும் நியமிக்கப்பட்டு அக்குழுவினூடாக அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதன் மூலம் பிரதேச அபிவிருத்தி வெற்றியடையும் என்ற முதலமைச்சரின் எண்ணக் கருவிற்கு அமைவாக இந்த அபிவிருத்திக் குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன.

செவ்வாயன்று ஏறாவூர் மிச்நகர் கிராம அபிவிருத்திக் குழுக் கூட்டம் நற்பணி மன்றத் தலைவர் யூ.எல். முஹைதீன்பாவா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மிச்நகர் கிராமத்திற்கான அபிவிருத்திக் குழு தெரிவு செய்யப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட இந்த அபிவிருத்திக் குழு உடனடியாக இயங்கி பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், போக்கு வரத்து, நீர்வடிகான் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து இனங்காணும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று முஹைதீன்பாவா தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: