(பழுவூரான்)
பெரியபோரதீவு – பழுகாமம் வீதி புனரமைப்புக்காக மாகாண சபையிலே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்கள் ஒரு கோடியே பத்து
இலட்சம் ரூபாயினையும், கௌரவ மா.நடராசா அவர்கள் அறுபது இலட்சம் ரூபாயினையும், கௌரவ பிரதித்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா அவர்கள் இருபது இலட்சம் ரூபாயினையும் ஒதுக்கி இவ்வீதியினை புனரமைப்பு செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை அவர்கள் தெரிவித்தார்.
அண்மையிலே பெரிய போரதீவு பட்டாபுர கிராமத்தில் இடம்பெற்ற சித்திரை கலாசார விளையாட்டு விழாவிலே இடம்பெற்ற அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்விலே பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஞா.ஸ்ரீநேசன் அவர்களும், கௌரவ எஸ்.வியாழேந்திரன் அவர்களும், கௌரவ சீ.யோகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மாகாண சபை விவசாய கால்நi; அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கி.துரைராசசிங்கம், கௌரவ பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கௌரவ ஞ.கிருஷ.ணபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் அங்கே அவர் உரையாற்றுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? என்னும் வினாவுக்கு பதிலளிக்க வேண்டியவனாக உள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இல்லாமல் இருந்திருதால், கடந்த காலங்களிலே இந்த காளி கோயிலினிலே குண்டுமழை பொழிந்த போது, தமிழ் மக்களை வாட்டி வதைக்க போதெல்லாம் அரசாங்கத்திலே இருந்த தமிழ் அமைச்சர்களோ அல்லது முதல் அமைச்சர்களோ குரல் கொடுத்தார்களா? மாறாக குரல் கொடுக்க முடிந்ததா? 'நாக்கிளியான் புழு கிணறு வெட்ட அணில் பிள்ளை பேரெடுத்தது போல் சிலர் இங்கே அரசியல் செய்ய வந்துள்ளார்கள்' கிழக்கு மாகாண சபையிலே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்கள் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாயினையும், கௌரவ மா.நடராசா அவர்கள் அறுபது இலட்சம் ரூபாயினையும், கௌரவ பிரதித்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா அவர்கள் இருபது இலட்சம் ரூபாயினையும் ஒதுக்கி இவ்வீதியினை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கியுள்ளோம். அரசாங்க கட்சியின் ஏதோ ஏதோ இணைப்பாளர்(பெயர் குறிப்பிடவில்லை) கூறியதாக அறிகின்றேன் இவ்வீதிக்காக 37 மில்லியன் ஒதுக்கியதாக கூறினார். அரசியல் செய்வதற்கு நாகரீகமான அரசியலும் உள்ளது. நாகரீகமற்ற அரசியலும் உள்ளது. ஆனால் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சொல்லிலே வீரர்களாக இருக்கமாட்டோம், செயலிலே வீரர்களாக இருப்போம். எங்களால் முடிந்த அனைத்து அபிவிருத்தி வேலைகளையும் செய்து தருவோம் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.
0 Comments:
Post a Comment