களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 50 வது வருடாந்த புத்தான்டு கலாசார விளையாட்டு விழா அண்மையில் கனகரெத்தினம் பகிரதன் தலைமையில்; மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக பாரளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீனேசன்,வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராசா ஆகியோருடன் இன்னும் பல சிறப்பு அததிகள் கலந்து கொண்டிருந்தனர்

இவ்வருடம் கழகத்தின் 50 வது பொன் விழவாக இவ் விளையாட்டு விழா அமைந்திருந்ததால் அனைத்து ஏற்பாடுகளும் பிரமாண்டமாக அமைந்திருந்தது. அந்த வகையில் பல புதுவிதமான நிகழ்வுகளும் உட்புகுத்தப்பட்டு இடம் பெற்றதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களின் அயராத முயற்சியினால் சிறந்த தலமைத்துவத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கட்டுக்கோப்பான சிறந்த விளையாட்டு விழாவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை காண்பதாக இங்கு உரையாற்றிய பிரதம அதிதிகள் கூறியிருந்தமை,இவ் விளையாட்டு விழாவுக்கு சிறந்த சான்றாக அமைகின்றது.
0 Comments:
Post a Comment