20 Apr 2016

மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ஈமானிய எழுச்சி மாநாடு

SHARE
அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (23.04.2016) மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ஈமானிய (விசுவாச) எழுச்சி மாநாடு ஏறாவூர் தௌஹீத் ஜும்மாப் பள்ளியில்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக றாபிதது அஹ்லிஸ் ஸ{ன்னா என்ற ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

மாலை 3.30 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரை இடம்பெற ஏற்பாடாகியுள்ள இந்நிகழ்வில் இலங்கையின் பிரபலமான மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை விசுவாசத்தைப் பலப்படுத்தி, வணக்க வழிபாடுகள் மீதான ஆர்வத்தை அதிகரித்து அகிலத்தை அமைதிப் பூங்காவாகப் பேணும் நோக்கில் இந்த விசுவாச மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக  ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: