மட்டக்களப்பு போரதீவு
- பழுகாமம் பிரதான வீதி புனரமைப்புக்காக கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சின்
ஊடாக மாகாண சபை உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு கோடி பத்து லட்சம் ரூபாயினை இவ்வீதியின் புணரமைப்புக்காக
ஒதுக்கியுள்ளேன்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின்,
படுவான்கரை பிரதேச அபிவிருத்தி தொடர்பான மக்கள்
சந்திப் பொன்று களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் திங்கட் கிழமை (18)
மாலை நடைபெற்றது. இதன் போது கருத்து; தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனை ஏன் நான் கூறுகின்றேன்
என்றால் நாக்கிளியான் புழு கிணறு வெட்ட அணில்பிள்ளை பெயரெடப்பத போன்று பெயர் எடுக்க
பலர் இருக்கின்றனர் இதற்காவே இதனை தெரிவிக்க வேண்டியுள்ளது என் என கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
தற்போது சிலர் எழுப்பப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்?
என்னும் வினாவுக்கு பதிலளிக்க வேண்டியவனாக உள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இல்லாமல்
இருந்திருதால், கடந்த காலங்களிலே இந்து ஆலயங்களிலே குண்டுமழை பொழிந்த போது, தமிழ் மக்களை வாட்டி வதைக்க
போதெல்லாம் அரசாங்கத்திலேஇருந்த தமிழ் அமைச்சர்களோ
அல்லது முதலமைச்சர்களோ குரல் கொடுத்தார்களா? மாறாக குரல் கொடுக்கமுடிந்ததா? இல்லை மாறாக
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான் குரல் கொடுத்தது.
'நாக்கிலியான் புழு கிணறு
வெட்ட அணில் பிள்ளை பேரெடுத்தது போல் சிலர் இங்கே அரசியல் செய்ய வந்துள்ளார்கள். கிழக்கு
மாகாண சபையிலே ஒதுக்கப்பட்ட நிதியில் நான் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாயினையும்,
எமது கட்சியின் சக மகிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அறுபது இலட்சம் ரூபாயினையும், பிரதித்த விசாளர் இந்திரகுமார் பிரசன்னா இருபது இலட்சம் ரூபாயினையும் ஒதுக்கி மெத்தமாக இவ்வீதியினை
புனரமைப்பு செய்வதற்காக ஒரு கோடி தொண்ணூறு லட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளோம்.
அரசாங்க கட்சியின் இணைப்பாளர் ஒருவர் மேற்படி வீதி புணரமைப்புச் செய்வதற்காக
37 மில்லியன் ஒதுக்கியதாகம் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் இதுவரையில் மத்திய அரசிலிருந்து
இவ்வீதி புணரமைப்புக்கு ந்த வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை
அரசியல் செய்வதற்கு நாகரீகமான
அரசியலும் உள்ளது. நாகரீகமற்ற அரசியலும் உள்ளது. ஆனால்நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
சொல்லிலே வீரர்களாக இருக்கமாட்டோம், செயலிலே வீரர்களாக இருப்போம். எங்களால் முடிந்த அனைத்து அபிவிருத்தி வேலைகளை செய்து
தருவோம் என்பதை உறுதிகூறுகின்றேன். என அவர் இதன் போது தெரிவித்தார்.
1 Comments:
Nalla vishayam thaan..
Athoda paddiruppu paalathila irunthu priya porativu varayilaana road aiyum koncham develop pannunga amaichar avarkale....
Post a Comment