30 Apr 2016

கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும்
மாணவர்கள் அவர்களது சில கோரிக்கைகளுக்கு பல்கலைக் கழக நிருவாகம், அக்கறையின்றிச் செயற்படுவதாககத் தெரிவித்து வெள்ளிக்கிழமை (29) பல்கலைக் கழக வாழாகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில. ஈடுபட்டனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்களாகிய நாங்கள் எங்களது உரிமையான கல்விச் சுற்றுலா விடையத்தில் பல்கலைக் கழக நிவாகத்தினல் அக்கறையின்றிச் செயற்படுகின்றனர்.

தற்போது எமது கல்விச் சுற்றுலா கடந்த 2 மாத காலமாக பிற்போடப்பட்டுக் கொண்டே வருகின்றது. இவற்றால் எமது பரீட்சைகள், மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிக்கப் படுகின்ற நிலமை காணப்படுகின்றது. இவற்றைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

விடுதிகளுக்கு ஒழுங்கான பாதுகாப்பு இல்லை, நிருவாக அடக்குமுறை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப் படுகின்றன. மாணவர்களின் கல்விசார் பிரச்சனைகள் தொடர்பில் நிருவாகத்தினர் அலட்சியம்,  போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் இதன்போது ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: