18 Apr 2016

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் பாரிய விபத்து

SHARE
(டிலா)

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று (18) திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் – பாணமை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் வண்டியும் தினசரி பத்திரிகை விநியோகம் செய்து விட்டு அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கெண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த சாரதிகள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காயமுற்ற பயணிகள் சிலர் கல்முனை மற்றும் நிந்தவூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவ்விபத்தில் இதுவரை உயிரிழப்புக்கள் எற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்தாக தெரவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் மோதுண்ட வாகங்கள் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: