14 Apr 2016

துர்முகி வருஷப் பிறப்பு காலமும், இவ்வருட ராசி பலனும்.

SHARE
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி துர்முகி வருஷப் பிறப்புக் கருமம்;
மன்மதவருஷம் பங்குனி மாதம் 31-ம் திகதி (13-04-2016) புதன்;கிழமை இரவு உதயாதி நாழிகை 34.24 மணிஇரவு 07.48ல் ஷஷதுர்முகி ‘ என்னும் பெயருடைய புதுவருஷம் பிறக்கின்றது. அன்று நட்சத்திரம் புனர்பூசம்1-ம் பாதம், திதி பூர்வபக்க ஸப்தமி, இது 60 வருட சுற்று வட்டத்தில் 30 ஆவது வருஷமாகும். அன்றுமாலை நாழிகை 24.24(மணி மாலை 03.48) இரவு நாழிகை 44.24(மணி இரவு 11.48 ) வரையும் மேட சங்கிரமண புண்ணியகாலம் ஆகும். வருஷம் பிறக்கும் போது உதயலக்கினம் ஷஷதுலாம் ‘ ஆக அமைகின்றது.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்துநீர் வைத்து தலையில்வேப்பமிலையும், காலில் கொன்றையிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து,பச்சைநிறப்பட்டாயினும் அல்லது பச்சைக்கரை வைத்த வெள்ளப் புது வஸ்திரமாயினுந் தரித்து,மகரதம்; சேர்த்து இழைக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து, விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து, இயன்ற தானாதிகள் வழங்கி, குரு, பெற்றோர் முதலிய பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசிபெற்று,நண்பர்கள், விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து, சுற்றத்தினருடன் இருந்து மோதகம், வடை, மாதுளம்பழம், நெல்லிக்காய்த் துவையல் முதலியவற்றுடன் அறுசுவைப் பதார்த்தங்களையும் போஜனஞ் செய்து, தாம்பூலமருந்தி,புதுப்பஞ்சாங்க பலன்களைக் கேட்டு சயனிப் பார்களாக.

மறுநாளாகிய வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து கண்ணாடி, தீபம், பூரண கும்பம் முதலிய மங்கலப் பொருட்களைத் தரிசித்து முன்போல் ஸ்நானம் செய்து புதுவருட சூரியனுக்கு பொங்கல், பூசை செய்து, பிதிர் விரதானுசாரிகள் சிரார்த்தம், தர்ப்பணம் என்பன செய்து, சுகந்த சந்தன புஸ்பாதகளையணிந்து,சுற்றத்தினருடன் போஜனஞ் செய்து, தாம்பூலமருந்தி புதுவருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச் சிந்தித்து மங்களகரமாக வாழ்வார்களாக.
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்:மிருகசீரிடம் 3ம், 4ம் கால்கள்,திருவாதிரை,புனர்பூசம்,விசாகம் 4ம் கால்கள்;,அனுசம்,கேட்டை,பூரட்டாதி

புதுவருடப்பிறப்பு : 13-04-2016 புதன்;;கிழமை இரவு 07.48
புண்ணியகாலம் : மணி மாலை 03.48 முதல் மணி இரவு 11.48 வரை.

கைவிசேடம் :16.04.2016சனி;;மாலை 06.10முதல் 07.30 வரை 18.04.2016 திங்கள் இரவு 10.16 முதல் 11.20வரை

வாக்கிய பஞ்சாங்கப்படி துர்முகி வருஷப்பிறப்புக் கருமம்

கலியுகாதி சுத்ததினம் மன்மத வருஷம் பங்குனி மாதம் 31திகதி (13.04.2016) புதன்;;கிழமை பின் இரவு நாடி 31 விநாடி 15 (மணி 06.36) பூர்வபக்க ஸப்தமித் திதியில், திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம்; பாதத்தில் இப்புதிய துர்முகி வருஷம் பிறக்கிறது. அன்று பிற்பகல் நாடி 21விநாடி 15 (மணி2.36 ) முதல் அன்று முன்னிரவு நாடி 41 விநாடி 15 (மணி10.36 ) வரை விஷு புண்ணிய காலமாகும்.

இப்புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் கடப்பமிலையும்,காலில் வேப்பிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெள்ளை நிறமுள்ள பட்டாடையாயினும், பச்சைக்கரை வெள்ளைக்கரை அமைந்த புதியபட்டாடையாயினும் தரித்து மகரதம், வைரம் இழைத்த ஆபரண மணிந்து வழிபாடு செய்க.

மறுநாளாகிய வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து கண்ணாடி, தீபம், பூரண கும்பம் முதலிய மங்கலப் பொருட்களைத் தரிசித்து முன்போல் ஸ்நானம் செய்து புதுவருட சூரியனுக்கு பொங்கல், பூசை செய்து, பிதிர் விரதானுசாரிகள் சிரார்த்தம், தர்ப்பணம் என்பன செய்து, சுகந்த சந்தன புஸ்பாதகளையணிந்து, சுற்றத்தினருடன் போஜனஞ் செய்து, தாம்பூலமருந்தி புதுவருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச் சிந்தித்து மங்களகரமாக வாழ்வார்களாக.
புதுவருடப்பிறப்பு :13-04-2016புதன்;;கிழமை


நேரம் :முன்னிரவு 06.36 மணி

புண்ணிய காலம்: பிற்பகல் மணி 2.36 முதல் முன்னிரவு மணி 10.36 வரை
கைவிசேடம்; : 16-04-2016இரவூ.38 முதல் இரவு 12.23வரை 16-04-2016இரவு 02.35 முதல் இரவு 04.04 வரை
விருந்துண்ணல் : 18.04.2016 இரவு 10.10 – 11.30 வரை 20.04.2016 பகல் 10.00 – 11.25 வரை
வித்தியாரம்பம்: 20.04.2016 பகல் 10.00 – 11.25 வரை 22.04.2016 பகல் 09.37 – 10.30 வரை
பூமி பிரவேசம் : 18.04.2016 இரவு 10.16 -11.30 வரை 20.04.2016 பகல் 10.00 -11.25 வரை


துர்முகி வருஷ கிரகணங்கள் ராசிப்பலன்


மேடராசி

(அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
மனம் அறிந்து பேசுவதில் வல்லமையும், துணிச்சலான முடிவு எடுக்கும் தைரியமும், உலக நடப்புக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்த மேடராசி அன்பர்களே! இவ்வருடம் சனி அட்டமத்தில் தொடர்ந்து நிற்பதால் சொல்லொணாத் துயரத்தைத் தருவார். செய்தொழில் இடையூறு ஏற்படும். மேலதிகாரிகள் சீற்றம் அடைவார்கள். வீண் கெட்ட பெயர், இடமாற்றம் ஏற்படும். அளவிட முடியாத அளவில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத வகையில் கஸ்ட நிலை ஏற்படும். கவலை, வீண் அலைச்சல், விஷபயம், மரணபயம், பொருள் இழப்பு, நண்பர்களால் தொல்லை, குடும்பத்தினரிடம் மனத்தாங்கல், விரக்தி ஆகியவற்றை எதிர்பார்த்தே ஆகவேண்டும். ஆரோக்கியத்திலும் ஒரு சிறு பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு. அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உரிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து நோய் முற்றிவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த நோயின் அறிகுறி தென்பட்டாலும் உடனடி சிகிச்சை தேவை. செலவுகள் அதிகமாகலாம். பண கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கை தேவை. வீண் விவாதம் கூடாது. பேச்சில் எச்சரிக்கை தேவை. சட்டபூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மை ஏற்படலாம். சிறு தவறும் பெரிதாகிவிடும். தேவையில்லாத பகை உணர்வு, தேவையற்ற விரோதம், காரணம் இல்லாமல் சிலர் கோபிப்பார்கள். செலவு கட்டுக் கடங்காமல் போகும். திருமணவயதிலிருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாகும் அல்லது வேறு சில பிரச்சினைகள் தோன்றி பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறிச் செல்லவும் இடமுண்டு. மாணவர்கள்கல்வியிலே கவனச்சிதறல் ஏற்படவாய்ப்புள்ளது. வேறு விடயங்களில் கவனம் கூடாது. குரு பார்வை பெறுவதால் ஓரளவு கஸ்டங்கள் நீங்கும். எனிலும் 2016.08.11இவ்வருடம் குருளூ ரோகம், சத்துரு, கடன் தானமான 6இற்கு வருவதால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அஜீரணக் கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி என்பன உண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். தொல்லைகள் அதிகரிக்கும். பணக்கவலைகள் எப்போதும் வாட்டிவரும். நெருக்கமானவர்களுடன் சில மனஸ்தாபங்கள் மனத்தாங்கல்கள் ஏற்படலாம். பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் நஸ்டம் ஏற்படும். மிகவும் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் நண்பர்கள், உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். குடும்ப உறவு பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்;கலில் கவனமாக இருக்க வேண்டும். கடன் திரும்பாது. மாணவர்களுக்கு கல்வியில் மறதி, அசதி போன்றவற்றால் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்படும். 2017.01.26 இல் அட்டமத்துச்சனி நீங்கப்பெற்ற பின் நற்பலன்கள் அதிகரிக்கும்.

இடபராசி

(கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகினி, மிருகசீரிடம் 1,2ம் பாதங்கள்)

நடை உடை பாவனையில் தனித்துவத்துடன் செயற்பட்டு பிறரை வசீகரிப்பது பெண்கள் மீது இரக்க குணம் கொண்ட இடபராசி அன்பர்களே!இவ்வருடம் குருளூ மாதா, வாகனம், வீடு, சுகத்தானமான 4இல் நிற்பதால்; அரச பணிகளில் தீவிரமாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். குறித்த காலத்தில் பணிகளை முடித்துக் கொடுக்கும் நிலை உண்டாகும். சில தடங்கல்களும் வீண் அலைச்சலும் இருந்து வந்தாலும் நினைத்ததை நடத்திக் கொள்வீர்கள். சொந்த வேலையைத் தள்ளிப்போட வேண்டி வரும். உங்களுக்கு கீழுள்ள பணியாளர்களின் உழைப்பு தேவை வரும். வாகனம், வீடு, பயிர், நிலம் என்பன கிட்டும் அல்லது அழகுபடுத்த வாய்ப்புக் கிட்டும். வீடு, வாகனம் தொடர்பான புதியமுயற்சிகளில் இறங்கினால் அது வெற்றியளிக்கும். ஆரம்பத்தில் தேகசுகம் பாதிக்கப்படும். மருந்துச் செலவு அளவு மீறிப் போகலாம். போகப் போக நலம் காண்பீர்கள். பெண்களுக்கு கர்ப்பப்பையில் குறைபாடுகளும் வைத்தியச் செலவும் கடன் பெறவும் நேரும். வெளியூர்ப் பயணம் இருக்கும். கல்வி சம்பந்தமான நல்ல முடிவு ஏற்படும். மேல்படிப்பு வசதி உண்டாகும். மத்திய கல்வி சிறப்பாக அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். புது உறவுகளும் ஏற்படும். மாதா, வாகனம், வீடு, தேகசுகம் என்பன சம்பந்தமான செலவுகள் அதிகமாகும்.ஆனாலும் 2016.08.11புத்திரர், பூர்வபுண்ணியம் மாமன் தானமான 5 இல் குரு வருவதால் படிப்படியாக சுபபலன்களை எதிர்பார்க்க முடியும். ராசியைப் பார்ப்பதாலும் ‘குரு பார்க்கின் கோடி புண்ணியமாம்’ என்பதற்கமைய நல்லதொரு ஆண்டாக அமைகிறது. பொருளாதாரம் நல்லபடி அமையும். அரச ஊழியர்களுக்கு மிகப்பெரிய பொறுப்புக்கள் கிட்டும். கடந்த ஆண்டு பட்டதுன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் ஆதரவும் உதவியும் கிடைக்கும். ஒரு புதிய ஜீவன் உதயமாகும். புத்திரபாக்கியம் எதிர்கொள்வோருக்கு புத்திரர் கிட்டும். பதவி உயர்வு கிட்டும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்பட்டு புதுமனை, பயிர், நிலம் ஆகியவை நன்மை ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி தரும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியிலே கிடைப்பதற்குரிய மிகப் பெரிய வெற்றிகளைப் பெறுகிற ஆண்டாக அமையும். கல்வியால் புகழ் பெறுவீர்கள். 2017.01.26 இல் சனி அட்டமத்துக்குவருவதால் சொல்லொணாத் துயரத்தைத் தருவார். செய்தொழில் இடையூறு ஏற்படும். மேலதிகாரிகள் சீற்றம் அடைவார்கள். வீண் கெட்ட பெயர், இடமாற்றம் ஏற்படும். அளவிட முடியாத அளவில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத வகையில் கஸ்ட நிலை ஏற்படும். கவலை, வீண் அலைச்சல், விஷபயம், மரணபயம், பொருள் இழப்பு, நண்பர்களால் தொல்லை, குடும்பத்தினரிடம் மனத்தாங்கல், விரக்தி ஆகியவற்றை எதிர்பார்த்தே ஆகவேண்டும். ஆரோக்கியத்திலும் ஒரு சிறு பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு. அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உரிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து நோய் முற்றிவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த நோயின் அறிகுறி தென்பட்டாலும் உடனடி சிகிச்சை தேவை. செலவுகள் அதிகமாகலாம். பண கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கை தேவை. வீண் விவாதம் கூடாது. பேச்சில் எச்சரிக்கை தேவை. சட்டபூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மை ஏற்படலாம். சிறு தவறும் பெரிதாகிவிடும். தேவையில்லாத பகை உணர்வு, தேவையற்ற விரோதம், காரணம் இல்லாமல் சிலர் கோபிப்பார்கள். செலவு கட்டுக் கடங்காமல் போகும். திருமண வயதிலிருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாகும் அல்லது வேறு சில பிரச்சினைகள் தோன்றி பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறிச் செல்லவும் இடமுண்டு. மாணவர்கள்கல்வியிலே கவனச்சிதறல் ஏற்படவாய்ப்புள்ளது. வேறு விடயங்களில் கவனம் கூடாது. குரு பார்வை பெறுவதால்ஓரளவு கஸ்டங்கள் நீங்கும். சனி யோககாரகனாக இருப்பதால் தீயபலன்கள் குறைவடையும்.

மிதுனராசி

(மிருகசீரிடம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்)


உயர்வான சிந்தனைகள் மனதில் நிகழ்த்தச் செயற்;படுவதுடன் புத்திசாலித்தனம் பிறருக்கு யோசனையும் செல்லும் மிதுனராசி அன்பர்களே! இவ்வருடம் குருளூ சகோதரர், போசனத்தானமான 3இல் நிற்பதால்; மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். செய்தொழிலில் தடங்கலும் வீண் கெட்ட பெயர் உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. இடமாற்றம் முயன்றாலும் தவிர்க்க முடியாது. காலம் செல்ல நன்மை கிட்டும். உணவு சுவையான உணவு கிடைத்தாலும் நேரத்துக்கு உண்ண முடியாமை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். திருமண முயற்சியில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். தந்தைக்கு சுகக்குறைவு ஏற்படும். குடும்பத்தில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய சகோதரர்களுக்கு சுகக்குறைவும் அலைச்சலும் கவலையும் ஏற்பட இடமுண்டு;. ஆயினும் 6ம்வீட்டில் இருக்கும் சனியால் கஸ்டங்கள் குறையும். மேலும் கடன் தொல்லைகள் அதிகமாகும். பகை ஓரளவு நீங்கும். தேகசுகம் பாதிக்கப்படும். வாய்வு பிடிப்பு, வாத சம்பந்தமான துன்பம், கை கால் எலும்பு முறிவு அல்லது சுழுக்கு, நரம்புத் தளர்ச்சி என்பன துன்பம் தரும். தவறி விழல், விபத்து என்பவற்றில் கவனம் தேவை. ‘கெட்டவன் கெட்டிட ராஜயோகமாம்’ என்ற முதுமொழிக்கேற்ப தீயபலன் ஒழிந்து நற்பலன் ஏற்படும். செல்வச்செழிப்பு ஆரோக்கியம், அனைவருடனும் நல்லிணக்கம் ஆகியவற்றை பெறக்கூடிய ஆண்டு. ஒரு யோகமான வருடம் அதிஷ்டகரமான வருடம். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் அமையும். செய்தொழிலில் இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும். எதிரிகள் பணிவார்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் தனலாபம் ஏற்படும். உத்தியோகத்தர் தொழில் செய்யும் இடங்களில் கஸ்டங்களை சமாளிக்க முடியும். திருமணத்தை எதிர்பார்த்திருப்போருக்கு காலதாமதம் ஏற்படும். மாணவர்கள் விடாமுயற்சி எடுத்தல் வேண்டும். 2017.01.26 இல் சனி ஏழாமிடத்துக்கு வருவதால் சொல்லொணாத் துயரத்தைத் தருவார். குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். சொந்தபந்தங்கள் எதிரும் புதிருமாக இருப்பார்கள். உற்றார் உறவினருடன் ஒற்றுமை ஏற்படவாய்ப்பில்லை கடுமையான உழைப்பினை செலவிட வேண்டி வரும். செய்தொழிலுக்கு இடையூறுகள் வந்து சேரும். வெளியூர்ப் பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும். ஆனால் அதிக நன்மைகள் ஏற்படாது. வயிற்றுவலி, மூட்டுவலி, எலும்புவலி, கழுத்து வலி, தைராய்ட்டுப் பிரச்சினை ஏற்படும். கெட்டசகவாசம் ஏற்படும். அதனால் வீண் கவலை ஏற்படும். குடும்பத்தில் உடல் நிலை பற்றிய கவலை இருந்து வரும். எச்சரிக்கையுடன் இருந்தால் பெரிய ஆபத்தைத் தடுக்கலாம். மணவாழ்க்கை எதிர்கொள்வோருக்கு மணவாழ்க்கை தாமதமாகும். அல்லது நிச்சயிக்கப்பட்ட குறிப்பிட்ட மாதத்தில் குறித்த திகதியில் நேரத்தில் திருமணம் நடைபெற முடியாதவாறு ஒரு சில பிரச்சினைகள் தோன்றும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறிச் செல்லவும் இடமுண்டு. புத்திரபாக்கியம் தாமதமாகும், தள்ளிப் போகும். தாய், தந்தை உடல் நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம், சொத்து, சம்பந்தமான பிரச்சினைகளைத் தரும். அதிக செலவுகள்; ஏற்படும்.

கர்கடகராசி

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம்,ஆயிலியம்)


நல்ல விஷயங்களில் நாட்டம் கொண்டு பொதுநல அக்கறையும் மக்கள் கவர்ச்சியும் கொண்ட கர்கடகராசி அன்பர்களே! இவ்வருடம் குருளூ தனம், வாக்கு வித்தை தானமான 2இல் நிற்பதால் நற்பலன் கிட்டும். வருமானம் பெருகும். தொழில் ஸ்திரத்தன்மை இருக்கும். முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இது வரை இருந்துவந்த நோய்கள் மாயமாக மாறும். கடன் வந்து சேரும். மரணபயம் நீங்கும். பொருள் வரவு நன்றாக அமையும். தடைப்பட்ட வரவு கிட்டும். கஸ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய ஜீவன் ஒன்று குடும்பத்தில் தோன்றும். நண்பர்கள் உதவியும் ஏற்படும். விரோதிகள் நண்பர்களாவர். பழைய உறவு வந்து சேரும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் நீதி நியாயங்கள் காணப்படும். சகலருடனும் அன்பாக இருப்பாhர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியால் பெருமை கிட்டும். ஆரம்பக் கல்வி மிக நன்றாக அமையும். தொழிலில் நல்ல வரவும் எதிர்பாலினரால் பொருள் வரவு ஏற்படும்.2016.08.11 இல் குருளூ சகோதரர், போசனத்தானமான 3இற்கு மாற்றமடைவதால் மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். செய்தொழிலில் தடங்கலும் வீண் கெட்ட பெயர் உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. இடமாற்றம் முயன்றாலும் தவிர்க்க முடியாது. காலம் செல்ல நன்மை கிட்டும். உணவு சுவையான உணவு கிடைத்தாலும் நேரத்துக்கு உண்ண முடியாமை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். திருமண முயற்சியில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். தந்தைக்கு சுகக்குறைவு ஏற்படும். காலம் செல்ல நன்மை உண்டாகும். குடும்பத்தில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய சகோதரர்களுக்கு சுகக்குறைவும் அலைச்சலும் கவலையும் ஏற்பட இடமுண்டு;. ஆயினும் சனிளூ புத்திரர்; தாய்மாமன் தானமான 5இல் இருப்பதால் புத்திரர் பாக்கியம் தாமதமாகும். புத்திரர் சுகக் குறைவு ஏற்படும். தொழில் முன்னேற்றம் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் முயற்சியில் உள்ளோருக்குத் தொழில் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு பெரிய முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். தொல்லைகள் அகலும். நோய்கள் அகலும். மணமாகாதவர் களுக்கு தாமதமாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். எதிர்பாராத வகையில் சொத்துக்கள் சேரும். குடும்ப உறவு பாதிக்கப்படும். தாய் மாமனுக்கு தேக சுகம் பாதிக்கப்படும். முன்னேற்றம் தடைப்;படும். கஸ்ட நிலை காணப்படும் மாணவர்களுக்கு ஓரளவு நன்மை ஏற்படும். இருப்பினும் கல்விக்கேற்ப நன்மை கிட்டும். உயர் கல்வியில் பெரும் நன்மை ஏற்படும்.குருளூ சகோதரர், போசனத்தானமான 3இற்கு வருவதால்;; மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். செய்தொழிலில் தடங்கலும் வீண் கெட்ட பெயர் உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. இடமாற்றம் முயன்றாலும் தவிர்க்க முடியாது. காலம் செல்ல நன்மை கிட்டும். உணவு சுவையான உணவு கிடைத்தாலும் நேரத்துக்கு உண்ண முடியாமை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். திருமண முயற்சியில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். தந்தைக்கு சுகக்குறைவு ஏற்படும். காலம் செல்ல நன்மை உண்டாகும். குடும்பத்தில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய சகோதரர்களுக்கு சுகக்குறைவும் அலைச்சலும் கவலையும் ஏற்பட இடமுண்டு;. மேலும் மனதில் யோசனை சஞ்சலம் என்பன இருக்கவே செய்யும். உடல்நிலையிலும் இடையிடையே நோய் காட்டக்கூடும். பொறுமையுடன் எவ்விடயத்தையும் கையாளுதல் வேண்டும். உத்தியோகத்தர்கட்கு தொழில் அலைச்சல் நிம்மதியின்மை காணப்படும். வர்த்தகத்துறையினருக்கு முதலீடுகள் விற்பனையாகாது தேங்கிக்கிடக்கும். திருமணத்தை எதிர்நோக்கியிருப்போருக்கு அதற்கான வாய்ப்புக்கள் வீணேகழியும். மாணவர்களுக்கு கல்வியிலும் பார்க்க பொழுதுபோக்கு துறையிலே நாட்டம் அதிகரிக்கும். 2017.01.26 இல் சனிபகவான் 6க்கு மாற்றம் பெறுவது சற்று அனுகூலமாகும்.

சிங்கராசி

(மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்)


தளராத நம்பிக்கையுடன் உழைத்து தகுந்த பலன் பெறுவதுடன் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயாத சிங்கராசி அன்பர்களே! இவ்வருடம் தேகம், குணம், லட்சணம் ஆகிய உங்கள் ராசிக்கே குரு இருப்பதால் வாழ்க்கை மிகவும் துன்பம் சூழும். நோய் பிடிக்கும். பணவிரயம், வீண் கவலை, வீண் அலைச்சல் முதலியன ஏற்படும். செய்தொழில் ஓரளவு கஸ்ட நிலை ஏற்படும். மக்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஆதரவும் தக்க தருணத்தில் உதவியும் கிடைத்து வரும். காலம் செல்லச் செல்ல புத்திரர் பாக்கியம் எதிர் கொள்வோருக்கு புத்திரர் கிட்டும். திருமண வாய்ப்புக் கிட்டும். குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும். இதனால் செயற்பாடுகளும் சிறப்பாக இருக்கும். தொழிலிலேயே நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் மேன்மை அடையும். சொத்துக்கள் சேரும். தந்தை வழியில் நன்மைகள் கிட்டும். குரு செலவுத் தானாதிபதியாக இருப்பதால் பல வழிகளிலும் செலவு ஏற்பட இடமுண்டு. குறிப்பாக புத்திரர், கணவன் அல்லது மனைவி, தந்தை ஆகிய வழியில் செலவுகள் அதிகமாக இடமுண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கஸ்ட நிலை காணப்படும். காலம் செல்லச் செல்ல முன்னேற்றம் காணப்படும். பரீட்சையில் சித்தி கிடைக்கும். ஆரம்பத்தில் கல்வியில் கூடிய விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருந்தாக வேண்டும். ஆரம்பத்தில் கடுமையாகவும் காலஞ் செல்லச் செல்ல பல நன்மையான காரியங்கள் நடைபெறும். முன்பிருந்த கஸ்டங்கள் நீங்கும். நன்மை உண்டாகும். அஜீரணக்கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி என்பன துன்பம் தரும். ஆனாலும் குருவுக்கு உச்சவீடாக இருப்பதால் கஸ்டபலன் குறைவடைந்து நற்பலனே நடைபெறும்.இவ்வருடம் சனி;ளூ தாய், சுகத்தானமான 4இல் தொடர்ந்து நிற்பதால்உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். நூதனமான நோய்கள் ஏற்படலாம். அலட்சியம் கூடாது. மனக்கவலை அளவுக்கதிகமாக இருக்கும். வரவுக்கு மேல் செலவு ஏற்படலாம். தாய்க்கு சுகக்குறைவு காணப்படும். செய்தொழில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு மறையும். வீடு, வாகனம், மனை,நிலம், பயிர் என்பன பலவிதமான கஸ்டங்களைத் தரும். குடும்ப உறவு நன்றாக அமையும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மத்திய கல்வியில் ஓரளவு கஸ்டநிலை காணப்படும். மத்திய கல்வியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி நன்றாக அமையும். 2016.08.11 இல் குருளூ தனம், வாக்கு வித்தை தானமான 2க்கு மாறுவதால் நற்பலன் கிட்டும். வருமானம் பெருகும். தொழில் ஸ்திரத்தன்மை இருக்கும். முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இது வரை இருந்துவந்த நோய்கள் மாயமாக மாறும். கடன் வந்து சேரும். மரணபயம் நீங்கும். பொருள் வரவு நன்றாக அமையும். தடைப்பட்ட வரவு கிட்டும். கஸ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய ஜீவன் ஒன்று குடும்பத்தில் தோன்றும். நண்பர்கள் உதவியும் ஏற்படும். விரோதிகள் நண்பர்களாவர். பழைய உறவு வந்து சேரும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் நீதி நியாயங்கள் காணப்படும். சகலருடனும் அன்பாக இருப்பாhர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியால் பெருமை கிட்டும். ஆரம்பக் கல்வி உயர்கல்வி என்பன மிக நன்றாக அமையும். தொழிலில் நல்ல வரவும் எதிர்பாலினரால் பொருள் வரவு ஏற்படும். மேலும் உத்தியோகத்தர்களுக்கு ஊதியஅதிகரிப்பு கிடைக்கும். வர்த்தகத்துறையினரின் வருமானம் இரட்டிப்பாகும். திருமணமாகாதோருக்கு மங்கல கருமம் மனம்போல் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி நற்போறுகளை அடைவர்.

கன்னிராசி

(உத்தரம் 2,3,4ம் பாதங்கள், அத்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்)


சூழ்நிலைகளுக்கு ஏற்பதன்னை பக்குவப்படுத்திக் கொள்ளுவதுடன் முன் எச்சரிக்கையும் செயல் திறமையும் நிறைந்த கன்னிராசி அன்பர்களே!இவ்வருடம் விரையம், தேசசஞ்சாரத்தானமான 12 இல் குருளூ நிற்பதால் மிகப்பெரிய நன்மைகளை எதனையும் செய்து விடாது. மிகப் பெரிய செலவுகளை ஏற்படுத்தும். மனக்கசப்பினை ஏற்படுத்துகிற சம்பவங்கள் சில ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நன்மைகள் சற்று குறை வாக நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அவ்வப்போது ஏற்படும். செய்தொழிலிலும் அமைதி இருக்காது. வரவிற்கு மேல் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கும். மங்களகரமான காரியங்களுக்குச் செலவு ஏற்படும். தாயின் தேகசுகம் பாதிக்கப்படும். செலவு அதிகமாகும். வீடு, வாகனம், பயிர், நிலம் என்பன துன்பம் தரும். சுகக் குறைவு ஏற்படும். பெரும்பாலும் மூச்சுத் திணறல், ஞாபக மறதி, அஸ்த்மா போன்றவை துன்பம் தரலாம். அவதானமாக இருக்க வேண்டும். தாமதித்தால் வருந்த நேரிடும். அதிக செலவு ஏற்படும். மரணபயம், விபத்து என்பன துன்பம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். வெளிநாடு செல்ல இருப்போருக்கு வாய்ப்புக் கிட்டும். தடை ஏற்படாமலே சித்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். மத்திய கல்வி மிக நன்றாக அமையும். கல்விக்காக அதிக செலவு ஏற்படும். அஜீரணக்கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி என்பன அதிக செலவைத் தரும். புத்திரர் பற்றிய கவலை உண்டாம்.உத்தியோகத்தர்களுக்கு பிரயாசைக்கேற்ப பிரதிபலன் உண்டு. வர்த்தக நடவடிக்கைகளில் ஒரளவு லாபம் ஏற்படும். திருமணத்தை எதிர்நோக்கியிருப் போருக்கு கருமம் தாமதமடையும். மாணவர்கள் மனத்தென்புடன் கல்வியில் ஈடுபட்டு மனச்சந்தோஷம் பெறுவர். இவ்வருடம் சனிளூ இளையசகோதரம், போசனத்தானமான 3இல் தொடர்ந்து நிற்பதால் இவ்வருடம் விரோதிகள் அழிவார்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவ முன்வருவார்கள். உடல் ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். செலவுகள் குறைவடையும். பொருளாதார நிலை நல்ல நிலையில் காணப்படும். குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் தோன்றும். புத்திரருக்கு தேக சுகக்குறைவு ஏற்பட இடமுண்டு. எடுத்த காரியங்கள் வெற்றியை அளிக்கும். செய்தொழிலில் ஆதாயத்தைத் தரும். மனக்கவலைகள் அகன்று மகிழ்ச்சி ஏற்படும். மேற்படிப்புக்கு வசதி உண்டாகும். உதவியும் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு கல்வி நல்லபடி அமையும். உயர்கல்வியில் ஓரளவு மந்த நிலை காணப்படும். ஆனாலும் பாதிப்பு ஏற்படாது. இளையசகோதரர்கள் தேகசுகம் பாதிக்கப்படும். அதனால் செலவுகள் ஏற்படும். அலைச்சலும் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வரவேண்டி இருந்தால் கிட்டும். போசனத்தில் திருப்தி இன்மை ஏற்படும். அகாலபோசனம் கிட்டும். மேலும் உத்தியோகத்தர்களுக்கு பதவியில் அந்தஸ்து உயரும். வர்த்தகத்துறையினர் வாடிக்கையாளரின் ஆதரவால் லாபமீட்டும். சந்தர்ப்பங்கள் அதிகரிக்க இடமுண்டு. திருமணபந்தத்தில் இணைய இருப்போருக்கு காலதாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு போட்டிகளில் வெற்றி தேர்வுகளில் சித்தி என்பனவற்றைப்பெற சாதகமான காலம். சனி;ளூ 2017.01.26 இல் தாய், சுகத்தானமான 4இற்கு மாறுவதால் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். நூதனமான நோய்கள் ஏற்படலாம். அலட்சியம் கூடாது. மனக்கவலை அளவுக்கதிகமாக இருக்கும். வரவுக்கு மேல் செலவு ஏற்படலாம். தாய்க்கு சுகக்குறைவு காணப்படும். செய்தொழில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு மறையும். வீடு, வாகனம், மனை,நிலம், பயிர் என்பன பலவிதமான கஸ்டங்களைத் தரும். குடும்ப உறவு நன்றாக அமையும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மத்திய கல்வியில் ஓரளவு கஸ்டநிலை காணப்படும். மத்திய கல்வியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி நன்றாக அமையும்.

துலாராசி

(சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி, விசாகம்; 1,2,3ம் பாதங்கள்)


தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கையுடன் அறச் செயல்ககளில் ஈடுபட்டு எந்தக் காரியத்தையும் எளிமையாகச் செய்யும் துலாராசி அன்பர்களே!
இவ்வருடம்லாபத்தானம் மூத்த சகோதரத்தானமான 11இல் குரு நிற்பதால் செய்தொழிலில் முன்பிருந்த கஸ்டங்கள் நீங்கும். செய்தொழிலில் முன்னேற்றம் மிக அற்புதமாக இருக்கும். வரவேண்டியிருந்த தொகை கைக்கு வரும். ஆரோக் கியத்தில் செய்தொழிலில், பொருளாதாரத்தில் மேன்மைகள் உருவாகும். காலம் செல்லச் செல்ல மேலும் மிகமிகச் சிறப்பான அற்புதமாதாக விளங்கும். உடல் நலிவு, மருத்துவர்களாலேயே இனம்கண்டறிய முடியாத புதுப்புது உடல் உபாதைகள் இருப்பின் அவை முற்றிலுமாக குணமாகும். குடும்பமும் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேன்மை அடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்திற்கான நேரம் வந்து விட்டது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.இல்லறம் நல்லறம் காணும். கணவன் மனைவியிடையே பிரிவு அல்லது தொழில் நிமிர்த்தம் பிரிந்து வாழ்ந்தவர் அல்லது தொழில் நிமிர்த்தமாக வெளியூரில் சென்றவர்கள் கணவனும் மனைவியும் ஒன்று சேரும் சூழல் உருவாகும். நல்லுறவு நீடிக்கும். மூத்த சகோதரகளின் நற்பலன் குறைவாகக் காணப்படும். தேகசுகம் பாதிக்கப்படும். அலைச்சல் கவலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் மிகமிக சிறப்பாக இருக்கும். உயர்கல்வியால் பெருமையடைவீர்கள். எதிர்பாலினர், தாய் இவர்கள் மூலமாக பொருள் வரவு ஏற்படும். இவ்வருடம் தனம், வாக்கு, வித்தைதானமான 2 இல்; தொடர்ந்து சனி நிற்பதால்ஏழரைச்சனி கடைக்கூறு நடைபெறுகிறது. சனி யோக காரகனாகவும் இருப்பதால் முன்பை விட துன்பங்கள் சிறிது சிறிதாகக் குறையும். மனக்கவலைகள் அகலும். வீண்செலவு, வீண் அலைச்சல் தொடர்ந்து கஸ்டம் தரும். குடும்பத்தில் மங்களகரமான சம்பவங்கள் நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். செய்தொழில் மாற்றம் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்க வழி பிறக்கும். தடைப்பட்டிருந்த தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். தொழிலில் நிலவிய தேக்க நிலை அகலும். தடைகள் அகலும். நிதி பற்றாக்குறை எனும் பேச்சுக்கு இனி இடமிருக்காது. பேச்சில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வீண் வம்புகள் ஏற்பட இடமுண்டு. வாக்குறுதியில் அவதானம் தேவை. அரச ஊழியர்களுக்கு பகைமை அகலும். நன்மைகள் பல நடைபெறும். அரசாங்கத்திலே பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு, உயர் பதவி, பாராட்டு என்பன கிடைக்கும். தொழிலை எதிர்பார்ப்போர் தொழில் கிட்டும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கப்போகிற ஆண்டு. தடைப்பட்ட கல்வி குறைவாக காணப்படும். இரண்டாவது சனி பலத்த நன்மைகளைத் தரும். மூன்றாவது சனி தேகசுகக் குறைவையும் அதிக செலவையும் ஏற்படுத்தும். நீடித்த சுகக் குறைவாக காணப்படும்.விரையம், தேசசஞ்சாரத்தானமான 12இற்கு 2016.08.11 இல் குருளூ வருவதால் மிகப்பெரிய நன்மைகளை எதனையும் செய்து விடாது. மிகப் பெரிய செலவுகளை ஏற்படுத்தும். மனக்கசப்பினை ஏற்படுத்துகிற சம்பவங்கள் சில ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நன்மைகள் சற்று குறைவாக நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அவ்வப்போது ஏற்படும். செய்தொழிலிலும் அமைதி இருக்காது. வரவிற்கு மேல் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கும். மங்களகரமான காரியங்களுக்குச் செலவு ஏற்படும். தாயின் தேகசுகம் பாதிக்கப்படும். செலவு அதிகமாகும். வீடு, வாகனம், பயிர், நிலம் என்பன துன்பம் தரும். சுகக் குறைவு ஏற்படும். பெரும்பாலும் மூச்சுத் திணறல், ஞாபக மறதி, அஸ்த்மா போன்றவை துன்பம் தரலாம். அவதானமாக இருக்க வேண்டும். தாமதித்தால் வருந்த நேரிடும். அதிக செலவு ஏற்படும். மரணபயம், விபத்து என்பன துன்பம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். வெளிநாடு செல்ல இருப்போருக்கு வாய்ப்புக் கிட்டும். தடை ஏற்படாமலே சித்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். மத்திய கல்வி மிக நன்றாக அமையும். கல்விக்காக அதிக செலவு ஏற்படும். அஜீரணக்கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி என்பன அதிக செலவைத் தரும். புத்திரர் பற்றிய கவலை உண்டாம்.உத்தியோகத்தர்களுக்கு பிரயாசைக்கேற்ப பிரதிபலன் உண்டு. வர்த்தக நடவடிக்கைகளில் ஒரளவு லாபம் ஏற்படும். திருமணத்தை எதிர்நோக்கியிருப்போருக்கு கருமம் தாமதமடையும். மாணவர்கள் மனத்தென்புடன் கல்வியில் ஈடுபட்டு மனசந்தோஷம் பெறுவர்.2017.01.26 இல் ஏழரைச்சனி முடிவடையும்.


விருச்சிகராசி

(விசாகம்; 4ம் பாதம்;, அனுஷம், கேட்டை)

எந்தச் சூழலிலும் கலங்காத உள்ளம் படைத்தும், கொண்ட கொள்கையை செயல்;படுத்த அயராது பாடுபடும் விருச்சிகராசி அன்பர்களே! இவ்வருடம் தொழில்தானமான 10இல் குருளூநிற்பதால் பொருளாதார நிலை பொதுவில் நன்றாக அமையும். வேற்று நண்பர்;களுடனான கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக நடைபெறும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். வாழ்க்கையில் வளமும் செல்வச் செழிப்பும் ஏற்படுகின்ற ஆண்டு இது. ஆரோக்கியத்தில் நிலவி வந்த சிறுசிறு குறைகள் நீங்கும். கண் தொடர்பான சிறு உபாதைகளுக்குச் சிகிச்சை மூலம் நலம் காண்பீர்கள். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைக்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆண் குழந்தை ஏற்பட இடமுண்டு. திருமண வயதிலுள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் சிறந்து விளங்கிடும் ஆண்டு. கல்வித்திறன் நன்கு வெளிப்படும். குடும்பத்தாரையும் ஒருசேர பெருமைப்படுவர்.இவ்வருடம்; சனிளூ தேகம், குணம், லட்சணத்தானமான ஜென்மத்தில் தொடர்ந்து நிற்பதால்; இவ்வருடம் உங்களுக்கு இவ்வருடம் சற்று கடினமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் கெடும். செய்தொழிலில் ஆதாயமும் உற்சாகமும் குறைவடையும். பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் போகும். வறுமை அளவு மீறியிருக்கும். நண்பர்கள் உறவினர்கள் விரோதம் ஏற்படும். குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நிகழலாம். பிரயாணங்கள் அவ்வளவு நல்ல பலனைத் தராது. குடும்பத்தில் அவ்வளவு கஸ்டம் இருந்த போதிலும் ஓரளவு மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும். தீய சக்திகள் உறவில் ஊடுருவும். தீய நடத்தைகள் தீய வழிகள் காணப்படும். விஷபயம், மரணபயம் என்பன துன்பம் தரும். 2016.08.11இல் குருளூ 11ம்இடத்தில் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். ஊடல் புத்துணர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் குதாகலம் காணப்படும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கப்பெறும்.வர்த்தக நடவடிக்கைகளில் வருமானமுன்னேற்றம் கிட்டும். விவாகமாகாதவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு மனதில் உற்சாகம் ஏற்பட்டுநற்பெறுபேறுகளைப் பெறும் வாய்ப்புக்கள் உண்டாகும். அந்நியதேசப்பிரயாணங்களும் ஆவலுடன் மேற்கொள்ளப்படலாம்.

தனுராசி

(மூலம், பூராடம், உத்தராடம்; 1ம் பாதம்)

தானும் நன்மை செய்து மற்றவர்களையும் நன்மை செய்ய வைக்கும் நற்குணம் படைத்த தனுராசி அன்பர்களே! இவ்வருடம் சனிளூ செலவு, தேசசஞ்சாரத்தானமான 12இல்; தொடர்ந்து நிற்பதால் இவ்வருடம் உழைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தைக்கூட அரும்பாடுபட்டுத்தான் பெறவேண்டும். அரச ஊழியர்களுக்கு நன்மைகள் நடைபெறும். அதேசமயம் வேளைப்பளு அதிகரிக்கும். பணவிரயம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குலையும். மக்களால் கவலை ஏற்படும். நோய் தொல்லை தரலாம். ஆனால் நண்பர்கள் உறவினர்கள் உதவியாலும் ஆதரவாலும் மனதிற்கு ஒருவித நிம்மதி கிடைத்து வரும். செய்தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்தி கூடுமானவரை பொறுமையுடன் கண்காணித்துவர பெரிய இழப்புகளிலிருந்து விடுபடலாம். உடல்நலத்தை கவனத்துடன் கவனிக்க வேண்டும். மூன்றாவது சனியாயில் உடல் நலத்தில் கூடிய கவனம் தேவை. (60வயதுக்குப் பின்) இரும்பு சம்பந்தமான பொருட்களால் துன்பம் ஏற்படும். செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். மக்கள் உதவி புரிவார்கள். திருமணத்தை எதிர்கொள்வோருக்கு காலதாமதமாகும். குரு பாக்கியம், தந்தைத்தானமான 9இல் நிற்பதாலும் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் ‘குரு பார்க்கின் கோடி புண்ணியமாம்’ என்பதற்கமைய நீண்ட காலமாக தொடர்ந்த பிரச்சினை மேல் பிரச்சினைதான் என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் போல் குரு ஜெகஜோதியான ஆண்டாக அமையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். எடுத்த காரியங்கள் வெற்றியுடன் முடிவடையும். பிரயாணங்களில் அனுகூலங்களும் ஆதாயமும் இருக்கும். குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் உதயமாகும். புத்திரர் பாக்கியம் எதிர்கொள்வோருக்கு புத்திரர் கிட்டும். திருமணத்தை எதிர்நோக்குவோருக்கு காரியம் கைகூடும். கணவன் மனைவி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சமூகத்தில் கௌரவம் நிலைக்கும். இதுவரை இருந்த கடன் தொல்லைகள் கவலைகள், கடன், மரணபயம், விஷபயம் அனைத்தும் அகலும். பொருள் சேர்க்கையும் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பரீட்சையில் அதிசித்தி கிடைக்கும். உயர்கல்வியில் அதிசித்தி கிட்டும். தந்தை தேகசுகமும் நற்பலனும் உண்டாம். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. 2016.08.11இல் தொழில்தானமான 10க்கு குருளூ வருவதால் பொருளாதார நிலை பொதுவில் நன்றாக அமையும். வேற்று நண்பர்;களுடனான கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக நடைபெறும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். வாழ்க்கையில் வளமும் செல்வச் செழிப்பும் ஏற்படுகின்ற ஆண்டு இது. ஆரோக்கியத்தில் நிலவிவந்த சிறுசிறு குறைகள் நீங்கும். கண் தொடர்பான சிறு உபாதைகளுக்குச் சிகிச்சை மூலம் நலம் காண்பீர்கள். திருமணமாகி பல வருடங்களாகியும் இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆண் குழந்தை ஏற்பட இடமுண்டு. திருமண வயதிலுள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ”10இல் குரு பதவியைப் பறிக்கும்’ என்பார்கள். என்பதற்கமைய மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. உத்தியோகத்திலும் சிறு இடையூறுகள் ஏற்படாமற் போகாது. எனவே தொழில் அவதானம் தேவை. முக்கால் பங்கு கழிய நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் சிறந்து விளங்கிடும் ஆண்டு. கல்வித்திறன் நன்கு வெளிப்படும். குடும்பத்தாரையும் ஒரு சேர பெருமைப்படுவர். மேலும் உத்தியோகத்தருக்கு தொழிலில் ஈடுபாடு குறைவாக இருக்கும். வர்த்தகநடவடிக்கைகளில் எதிர்பார்த்த லாபம்கிடைப்பது கடினம். திருமணபந்தத்தில் ஈடுபாடுடையோருக்கு வருட ஆரம்பம் சாதகமானதாக இருக்கும். கல்வியில் வெற்றியடைய மாணவர்கள் முயற்சியை அதிகரித்தல் வேண்டும். 2017.01.26 இல் ஏழரைச்சனி நடுக்கூறு ஆரம்பமாகும்.

மகரராசி

(உத்தராடம்; 2,3,4ம்பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம்பாதங்கள்)

கருணை நிறைந்த மனத்துடன் பிறருக்கு உதவும் எண்ணமும் எதையும் சாதிக்கும் திறமையும் கொண்ட மகரராசி அன்பர்களே! இவ்வருடம் குரு அட்டமத்தானத்தில்நிற்பதால் சற்று கடினமானதாக இருக்கும். முக்கிய பணிகளை காலம் தாமதிக்காமல் முடித்துக் கொள்வது நல்லது. முதலீடுகள் செய்வதில், வீடு கட்டுவது, திருமணம் முடிப்பது போன்ற பணிகளை தாமதிப்பது நல்லதல்ல. ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்படும். இருதயநோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டி ஏற்படலாம். தீய எண்ணங்கள் ஆட்கொள்ளும். ஆயுதங்களால் காயங்கள், விபத்துக்கள், எதிர்பாராத செலவினங்கள் முதலியவற்றில் அவதானமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் இல்லாவிட்டால் உறவுகளில் விரோதம் ஏற்படும். தேவையில்லாத விரோதம், காரணமில்லாமல் சிலர் கோபிப்பார்கள். திருமண வாய்ப்பிருப்பவர்களுக்கும். திருமணம் தாமதமாகும். அல்லது நிச்சயிக்கப்பட்ட குறிப்பிட்ட மாதத்தில் திகதியில் நேரத்தில் திருமணம் நடைபெற முடியாதவாறு ஒரு சில பிரச்சனைகள் தோன்றி அதனால் பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறி செல்லவும் இடமுண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறைவடையும். கல்வி தடைப்படும். கல்வியில் கூடிய கவனம் தேவை. தேகசுகம் பாதிக்கப்படும். பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் நோய் தாக்கங்கள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி குடல், கிட்னி தொடர்பான பிரச்சினை ஏற்படலாம். பெண்களாயின் கர்ப்பம் சம்பந்தமான துன்பம் ஏற்படலாம். உயிர் ஆபத்து நிகழலாம். இவ்வருடம் சனிளூ லாபம், மூத்த சகோதரத்தானமான 11இல் தொடர்ந்து நிற்பதால் எண்ணியவை கூடும். செய்தொழிலில் அதிக நன்மைகள், பொருள் சேர்க்கையும் கிட்டும். ஆனால் எல்லாம் தாமதமாகும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் மந்தமடையும். கடும் உழைப்பால் பொருள் சேர்க்கை நன்றாக அமையும். நண்பர்கள் இயன்ற உதவிகளைச் செய்வர். பெரிய விபத்துக்கள் நடைபெற்றாலும் தீமைகள் எதுவும் பெரிய அளவில் ஏற்படாது. நன்மையும் தீமையும் சேர்ந்தே காணப்படும். புத்திரர் வழியில் பிரச்சினைகள் ஏற்படும். புத்திரர் எதிர்கொள்வோருக்கு புத்திரர் பாக்கியம் பின்தள்ளிப் போகும். சகோதரருக்கு கஸ்டநிலை காணப்படும். மூத்த சகோதரருக்கு அதிகஸ்டம், பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பரீட்சையில் சித்திகளும், பாராட்டுக்களும் பரிசில்களும் கிடைக்கும். திருமணத்தை எதிர்நோக்குவோருக்கு கடும்முயற்சி மூலம் கிட்டும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். 2016.08.11இல் குரு பாக்கியம், தந்தைத்தானமான 9இல் நிற்பதாலும் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் ‘குரு பார்க்கின் கோடி புண்ணியமாம்’ என்பதற்கமைய நீண்ட காலமாக தொடர்ந்த பிரச்சினை மேல் பிரச்சினை தான் என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் போல் குரு ஜெகஜோதியான ஆண்டாக அமையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். எடுத்த காரியங்கள் வெற்றியுடன் முடிவடையும். பிரயாணங்களில் அனுகூலங்களும் ஆதாயமும் இருக்கும். குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் உதயமாகும். புத்திரர் பாக்கியம் எதிர்கொள்வோருக்கு புத்திரர் கிட்டும். திருமணத்தை எதிர்நோக்குவோருக்கு காரியம் கைகூடும். கணவன் மனைவி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சமூகத்தில் கௌரவம் நிலைக்கும். இதுவரை இருந்த கடன் தொல்லைகள் கவலைகள், கடன், மரணபயம், விஷபயம் அனைத்தும் அகலும். பொருள் சேர்க்கையும் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பரீட்சையில் அதிசித்தி கிடைக்கும். உயர்கல்வியில் அதிசித்தி கிட்டும். தந்தை தேகசுகமும் நற்பலனும் உண்டாம். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் உத்தியோகத்தினர் தொழில்துறையில் ஏற்றம் காண்பர். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிட்டும். வர்த்தக நடவடிக்கைகளில் வருமானம் அதிகரிக்க இடமுண்டு. திருமணத்தை எதிர்பார்த்திருப்போருக்கு மங்கல கருமம் மனநிறைவுடன. அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து ஆசிரியர்,பெற்றோர் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெறுவர். 2017.01.26இல் ஏழரைச்சனி ஆரம்பமாகும்.

கும்பராசி

(அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்)

வாழ்வில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னடக்கத்துடன் செயற்படுவதுடன் எதையும் இன்றே செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்ட கும்பராசி அன்பர்களே!இவ்வருடம்; களத்திரத்தானத்தில் குரு நிற்பதாலும்;; குரு பார்ப்பதாலும் ‘குரு பார்க்கின் கோடி புண்ணியமாம்’என்பதற்கமைய ராசியைப் பார்ப்பதாலும் இதுவரை இருந்த வந்த கஸ்டங்கள் மேல் கஸ்டங்கள் எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் போல் சிறந்த ஆண்டாக திகழும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பெரியோர் சந்திப்பு ஏற்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தேகசுகம் விருத்தியடையும். கடன் சுமை விலகும். பகைமை விலகும். செய்தொழிலில் நல்ல ஆதாயமும் உற்சாகமும் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் உதயமாகும். புத்திரபாக்கியம் எதிர்கொள்வோருக்கு புத்திரர் கிட்டும். கணவன் மனைவி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி; முன்னேற்றம் சிறந்து விளங்கிடும் ஆண்டு. கல்வித்திறன் நன்கு வெளிப்படும்.உங்கள் குடும்பத்தவரை பெருமைப்படுத்துவீர்கள். களத்திரத்துக்கு அதிக செலவு ஏற்படும். இளைய சகோதரத்துக்கு நல்ல பலன் உண்டாம்.இவ்வருடம்; சனிளூ தொழில்தானமான 10ல் தொடர்ந்து நிற்பதால் செய்தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இருந்தும் கஸ்டநிலை ஏற்படும். சக ஊழியர்கள் எதிரிகளாவர். மேலதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிவரும். இடமாற்றமும் ஏற்படலாம். தொழிலுக்காக செலவு ஏற்பட இடமுண்டு. பணத்தட்டுப்பாடு குறையும். வாழ்க்கையில் முன்னேற்றங்களைச் சந்திப்பீர்கள். குடும்ப அங்கத்தினர்களினது ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். பொருளாதாரம், ஆரோக்கியம், குடும்பம் அனைத்தும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பசுகம் பாதிக்கப்படும். தாய்க்கு சுகக்குறைவு ஏற்படும் இதனால் அதிக செலவு ஏற்படும். திருமணத்தை எதிர்கொள்வோருக்கு தாமதமாகும். இழுபறிநிலை காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 2016.08.11இல் குரு அட்டமத்தானத்திற்கு செல்வதால்; சற்று கடினமானதாக இருக்கும். முக்கிய பணிகளை காலம் தாமதிக்காமல் முடித்துக் கொள்வது நல்லது. முதலீடுகள் செய்வதில், வீடு கட்டுவது, திருமணம் முடிப்பது போன்ற பணிகளை தாமதிப்பது நல்லதல்ல. ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்படும். இருதயநோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டி ஏற்படலாம். தீய எண்ணங்கள் ஆட்கொள்ளும். ஆயுதங்களால் காயங்கள், விபத்துக்கள், எதிர்பாராத செலவினங்கள் முதலியவற்றில் அவதானமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் இல்லாவிட்டால் உறவுகளில் விரோதம் ஏற்படும். தேவையில்லாத விரோதம், காரணமில்லாமல் சிலர் கோபிப்பார்கள். திருமண வாய்ப்பிருப்பவர்களுக்கும். திருமணம் தாமதமாகும். அல்லது நிச்சயிக்கப்பட்ட குறிப்பிட்ட மாதத்தில் திகதியில் நேரத்தில் திருமணம் நடைபெற முடியாதவாறு ஒரு சில பிரச்சனைகள் தோன்றி அதனால் பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறி செல்லவும் இடமுண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறைவடையும். கல்வி தடைப்படும். கல்வியில் கூடிய கவனம் தேவை. தேகசுகம் பாதிக்கப்படும். பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் நோய் தாக்கங்கள் ஏற்படலாம். அஜீரணக்கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி குடல், கிட்னி தொடர்பான பிரச்சினை ஏற்படலாம். பெண்களாயின் கர்ப்பம் சம்பந்தமான துன்பம் ஏற்படலாம். உயிர் ஆபத்து நிகழலாம். மேலும் உத்தியோகத்தினருக்கு உயர்ச்சிகள் மந்தமாகவே இருக்கும். வர்த்தகத்துறையினருக்கு வாடிக்கையாளரின் ஆதரவு குன்றும். திருமணவாய்ப்புக்கள் வருடாரம்பத்தில் பலிதமாகும். மாணவர்கள் விளையாட்டு,களியாட்டம் என்பவற்றில் கல்வியில் பின்தங்கிக் காணப்படுவர். 2017.01.26 இல் சனி மாற்றமடைவது அநுகூலமானதாகும்.

மீனராசி

(பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

துணிச்சலான செயல்களை நம்பிக்கையுடன் செய்து வெற்றி பெறுவதுடன் சகலரது நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பண்பு கொண்ட மீனராசி அன்பர்களே! இவ்வருடம் குருளூ ரோகம், சத்துரு, கடன் தானமான 6இல் நிற்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அஜீரணக்கோளாறுகள், மூச்சுத் திணறல் அஸ்த்மா, ஞாபகமறதி என்பன உண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். தொல்லைகள் அதிகரிக்கும். பணக்கவலைகள் எப்போதும் வாட்டிவரும். நெருக்கமானவர்களுடன் சில மனஸ்தாபங்கள் மனத்தாங்கல்கள் ஏற்படலாம். பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் நஸ்டம் ஏற்படும். மிகவும் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் நண்பர்கள், உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். குடும்ப உறவு பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்;கலில் கவனமாக இருக்க வேண்டும். கடன் திரும்பாது. இவ்வருடம் சனிளூ பிதா, பாக்கியத்தானமான 9இல் தொடர்ந்து நிற்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களாயினும் சுயதொழில் செய்பவர்களாயினும் தொழில் மேன்மை ஏற்படும் அல்லது மாற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு முதலியவை கிட்டும். தொழிலில் அவதானமும் உழைப்பும் தேவை. வெளியூர்ப் பிரயாணமும், கெட்டபெயரும், பொருள் நட்டமும் ஏற்படும். குடும்பத்தில் சிலரை எச்சரிக்கையுடன் கவனித்து வரவேண்டும். அலட்சியம் கூடாது. பிதா சுகக்குறைவு ஏற்படலாம். பிதா வழி நன்மைகள் கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள் வரவேண்டியிருந்தால்; கிட்டும். பிதா வழி பல உதவிகள் கிட்டும். நூதனமான, பழமை வாய்ந்த சொத்துக்கள் பொருட்கள் கிட்டும். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை நிலவும். குடும்பத்தேவை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். கடினமாக உழைத்து முன்னேறக்கூடிய வருடம.; முயற்சிக்கேற்ற பலன் கிட்டும். மேலும் எவ்விடத்திலும் அவதானதுடன் செயற்பட வேண்டும். 2016.08.11இல் குருஇவ்வருடம்; களத்திரத்தானத்தில் மாறுவதாலும்;; குரு பார்ப்பதாலும் ‘குரு பார்க்கின் கோடி புண்ணியமாம்’ என்பதற்கமைய ராசியைப் பார்ப்பதாலும் இதுவரை இருந்த வந்த கஸ்டங்கள் மேல் கஸ்டங்கள் எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் போல் சிறந்த ஆண்டாக திகழும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பெரியோர் சந்திப்பு ஏற்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தேகசுகம் விருத்தியடையும். கடன் சுமை விலகும். பகைமை விலகும். செய்தொழிலில் நல்ல ஆதாயமும் உற்சாகமும் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் உதயமாகும். புத்திரபாக்கியம் எதிர்கொள்வோக்கு புத்திரர் கிட்டும். கணவன் மனைவி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி; முன்னேற்றம் சிறந்து விளங்கிடும் ஆண்டு. கல்வித்திறன் நன்கு வெளிப்படும். உங்கள் குடும்பத்தவரை பெருமைப்படுத்துவீர்கள். களத்திரத்துக்கு அதிக செலவு ஏற்படும். இளைய சகோதரத்துக்கு நல்ல பலன் உண்டாம். உத்தியோகத்தகளுக்கு உரிய கௌரவம் கிடைக்கும். வர்த்தகத்துறையினர் முதலீடுகளால் இலாபமீட்டும் சந்தர்ப்பங்கள்உண்டாகும்.அந்நிய தொடர்புகள் நற்பலன்களைத் தரும். திருமணமுயற்சிகள் விரைவில் கைகூடும். மாணவர்கள் மதிநுட்பத்துடன் செயற்பட்டு மனநிறைவான பலன்களைப்பெறுவார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: