23 Apr 2016

உருக்குலைந் நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை (22) காலை உருக்குலைந்த நிலையில் கிடந்த ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்
பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அரியக்குட்டி சிறிஸ்கந்தராசா என அடையளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 07.04.2016 அன்று அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 13.04.2016 இவர் காணாமல் போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக் கிழமை காலை ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியிலிருந்து குறித்த நபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: