எங்களுடைய சக கிராம உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரன் அவர்கள் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக அனைவருடைய சங்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இவ்வாறான நிலையிலே அவருடைய விசாரணை துரிதப்படத்தப்பட வேண்டும், என மட்டக்ளப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.ஞானசிறி தெரிவித்தார்
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரன் அண்மையில் சிவபுரத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்ட கிரா உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனஈர்ப்பு ஊர்வலம் நேற்று இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு கொலைச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரன் அண்மையில் சிவபுரத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்ட கிரா உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனஈர்ப்பு ஊர்வலம் நேற்று இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு கொலைச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
எங்களுடைய சக கிராம உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரன் அவர்கள் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக அனைவருடைய சங்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இவ்வாறான நிலையிலே அவருடைய விசாரணை துரிதப்படத்தப்பட வேண்டும், என்பதுடன் கொலைக்குரிய மர்மம் என்ன என்பது கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். அரச உத்தியோகத்திலே அதிகாரங் கொண்ட கிரமா உத்தியோகத்தருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. என்றால் சாதாரண உத்தியோகத்தருக்கு எவ்வாறு எற்படும். அது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
சட்ட நமவடிக்கை எடுக்கின்ற வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியாக இருந்தாலும்சரி சட்டத்தினை நிலைநாட்டுகின்ற ஏனைய அதிகாரிகளாக இருந்தாலும்சரி நான்கு நாட்களுக்கு பின்னரே பிரேதம் கையளிக்கப்ட்டிருக்கின்றது அதுவும் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின் போரிலே பிரேதம் கையளிக்கப்பட்டது. இக் கொலையை பலபேர் சேர்ந்து செய்துள்ளதாக பொதுமக்களும், அவருடன் சென்று தாக்கதலுக்கு உள்ளாகி வைத்தியாலையில் உயிர்பிளைத்திருக்கும் நபரும் கூறுகின்றார். அவ்வாறு இருந்தும் இதுவரை இரண்டு நபர்கள் மாத்திரமே கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். ஏனையவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அது மாத்திரமின்றி இவ்வாறான நிலமை எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கும் இனிமேலும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும், சட்டத்தினை கையிலெடுத்து சட்டத்தோடு விளையாடுகின்ற அந்த நபர்களுக்கு எதிராக பாராபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய நிலை ஏற்படவேண்டும். என்பதனையே நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.
இவ்வாறானதோர் நிலை மேலும் எற்படுவதாக இருந்தால் சட்டம் தூங்கிக் கொண்டு இருப்பதாகத்தான் கருதவேண்டியேற்படும். அதுமாத்திரமல்ல எமது நாடும் தூங்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே சட்டத்தினை நிலை நாட்டக் கூடிய அதிகாரிகள் இதில் விரைந்து இந்த கொலையின் மர்மத்தினை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்;டும். உண்மையிலேயே கொல்லப்பட்ட உத்தியோகத்தர் மிகவும் நேர்மையானதும், தூய்மையானதும். கறைபடியாத கையும், கலங்கமற்ற மனசும் கொண்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை வேதனையான ஒரு விடயம் எனவே இவ்வாறனதோர் கிரம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் நாங்கள் வெறுமனே இருந்துவிட முடியாது இவ்விடயம் தொர்பில் ஓரிரு தினங்களுக்குள் இதற்கான முடிவு எமக்கு கிடைக்க வேண்டும் என்பதே மட்க்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் வேண்டுகோளாக இருக்கின்றது என அவர் இதன் போது தெரிவித்தார்..
0 Comments:
Post a Comment