இந்தாட்டிலே முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் நிம்மதிப் பெருமூச்சிவிட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிக்கின்றார்கள். இந்நிலையில் மிண்டகாலமாக விடுக்கப்பட்டிருந்த ஐரோப்பிய
ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமத்திக்கான தடை தற்போது நீக்கப்பட்டடிருப்பது இந்நாட்டுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும், ஏற்றுமதித் துறையில் ஒரு புதிய முனைப்பாகவும் அமைக்கின்றது.
என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்எஸ்.அமீரலி தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக் கிழமை (29) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகiயில்…
மனித உரிமை மீறல்கள் விடையத்தில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக சில சர்வதேச குறியீடுகள் குறிப்பிடுகின்றன. இவைகளெல்லாம் இந்த நாட்டிலே ஏற்படுகின்ற நல்லாட்சியை மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் நல்லாட்சி மிகவும் திறம்மபட இடம்பெறுகின்றது என்பதையே சுட்டி நிற்கின்றன.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் அபிவித்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக் கீடுகள் மாத்திரமல்லமல், கிராமிய உட்கட்டுமாக அனைத்து விடையங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. இப்பிரதேசத்தில் இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளுக்கும், தீர்வு காணும் நோக்கில் இப்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனுடாக அபிவிருத்தியின்பால் இப்பிதேசத்தில் பாரிய மாற்றதை;தைக் கொண்டுவரவுள்ளோம். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment