(டிலா)
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவுக் கட்டிடம், மருந்துக் களஞ்சியம், இயன் மருத்துவ அலகு, தாதியர் விடுதிக் கட்டிடம், மூடிய நடைபாதை, அம்பியுலன்ஸ் வண்டித் தரிப்பிடம், சாரதி விடுதி போன்றவற்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு (02) திறந்துவைத்தார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சராக பதவி வகித்த போது ஒதுக்கப்பட்ட 26 மில்லியன் நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கட்டிடங்களே இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் விடா முயற்சினால் மத்திய சுகாதார அமைச்சு நிதி மூலம் 50 மில்லியன் பெறுமதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்வரும் மருத்துவ உபகரணங்களும் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சம்மாந்துறை சுகாதார சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
01. Endoscope
02. Laparoscope
03. Colonoscope
04. X – Ray – CR System
05. Modern Dental Chair
01. Endoscope
02. Laparoscope
03. Colonoscope
04. X – Ray – CR System
05. Modern Dental Chair
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், பிரதி அமைச்சர் பைசால் காசிம் உட்பட மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், கே.எம். அப்துல் ரசாக், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment