30 Apr 2016

களுவாஞ்சிகுடி பிரதான வீதில் இக்கும் விசேட அதிரடிப் படை முகாமை அகற்றுமாறு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு

SHARE
மிகநீண்ட காலமாக களுவாஞ்சிகுடி பிரதான வீதில் இந்து வரும் விசேட அதிரடிப் படை முகாமை அவ்விடத்திலிந்து அகற்றுதல் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்  வெள்ளிக் கிழமை (29) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இப்பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி ஆகியேரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, உப்பினர்களான கோ.கருனாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இப்பிரதேசத்தின் நன்மை கருத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கமநல அபிவித்தித் திணைககளத்திற்குரிய களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள காணியில் 40 அடி நீளம் கொண்ட காணித்துண்டை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வழங்குதல், 

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன் நிற்கும் ஆலமரத்தை வெட்டி அகற்றுதல், மேற்படி வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய நிபுணர்களைப் பெற்று இவ்வைத்தியசாலையை மாகாண வைத்தியசாலையாகத் தரமுயர்த்துதல்.

இப்பிரதேசத்தில் கல்வித் துறையில் காணப்படும் குiபாடுகளை நிவர்த்தி செய்தல்.

மகிழூர் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமித்தல்.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசனக் குளத்தில் அமைந்துள்ள சாப்பைப் புற்களை அகற்றுதல்.

இப்பிரதேசத்திலுள்ள 2000 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களை அமுல் செய்தல்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் காணப்படும் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியை இப்பிரதேசத்தில் காணப்படும், வீதி புணரமைப்பு, குடிநீர் பிரச்சனைகளைத் தீர்த்தல், போன்ற பல செயற்பாடுகளுக்கு வழங்குதல்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை நகரசபையாக தரமுயர்த்துதல்.

எதிர்வரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத்திற்குள் இப்பிரதேசம் அனைத்திற்கும் தடையற்ற நீர் வழங்கலை மேற்கொள்தல்.

மலசலகூடக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்தல்.

பொது இடங்களிலும், வீதிகளிலும் 200 மின் விளக்குகளைப் பொருத்துதல்.

இப்பிரதேசத்தில் காணப்படும் 1750 கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், 500 கோழி வளர்ப்பாளர்களுக்கும், தேவையான உதவிகளை மேற் கொள்தல்.

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப் படை முiகாமை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுதல். பேன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

இப்பிரதேசத்தில் அண்மையில் மரணமடைந்த கிராமசேவை உத்தியோகஸ்தரின் மாரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தல், போன்ற பல விடையங்கள் பற்றியும் இதன்போது வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
















SHARE

Author: verified_user

0 Comments: