மெரைன் டிரைவ் கடற்கரை வீதியின் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி மெரைன் டிரைவ் கடற்கரை வீதியை செப்பனிடுவதற்காக 10 மில்லியன் ரூபா ஒதிக்கீடு செய்யப்பட்டு அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் கடற்கரை வீதி சந்தியிலிருந்து இரு புறமுமாக மொத்தம் 600 மீற்றர்கள் நீளமான வீதி புனரமைப்புச் செய்யப்படும். புனரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் 25.04.2016ஆந்திகதி திங்கள்கிழமையன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர்
மிஹாஜ் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் குறித்த வீதிக்கு நேரடியாக சென்று புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதியின் நீளம், அகலம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கணிப்பீடுகளை மேற்கொண்டனர்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் இவ்வீதியின் புனரமைப்புக்கான விலைமனுக்கோறல் அழைப்பு விடுக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் புனரமைப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment