20 Apr 2016

மரணமடைந்த கிராம உத்தியோகஸ்தருக்கு நீதி வேண்டும் எனக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்- (வீடியோ & படங்கள்)

SHARE
மட்டக்களப்பு சிவபுரத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி புதன் கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.
கடந்த 15.04.2016 சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குறித்த கிராம சேவை உத்தியோகத்தரின், மரணச் சடங்கு மகிழுரில் உள்ள அன்னாரது இல்லத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்று பின்னர் அவர் கடமை புரிந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திகு அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் புதன் கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கடமை புரிம், பிரதேச செயலாளர் கலநிதி.எம்.கோபாலரெத்தினம். அரச உத்தியோகஸ்தர்கள், அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள், அனைவரும் கறுப்பு பட்டி பதாகைகளை ஏந்தியவாறு அமைத்தியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட

மரணமடைந்த எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம்,  அரசே கிரம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை எந்தியவாறு பிரதேச செயலகத்திலிருந்து களுவாஞ்சிகுடி நகர் வரைச் சென்று தமது எதிர்ப்பை வெளிக் காட்டினர். 

இதன்போது அகில இலங்கை ஐக்கிய கிராம சேவை உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்த தலைவர் எஸ்.ஞானசிறியினால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரிடம் மரணமடைந்த தமது கிராம உத்தியோகஸ்தர் விக்னேஸ்வரனுக்கு உரிய நீதி பெற்றுத்தருமாறு வேண்டி மகஸர் ஒன்றும் வழங்கப்பட்டது.


எமது சக கிராமசேவை உத்தியோகத்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன இந் நிலையில் சிறந்த நிருவாகியான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் கொலை செய்தவர்கள், அவரின் சிறந்த நிருவாகத்தினை முடக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எடுத்து விளக்கியுள்ளோம். அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு உத்தரவினை விடுத்திருக்கின்றார்.

இவ்வாறான சம்பவம் கிரம உத்தியோகத்தருக்கு மட்டுமல்ல ஏனைய அரச உத்தியோகதர்களுக்கும் இனிமேலும், ஒருபோதும் இடம் பெறக்கூடாது. அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களது சேவையை சரியாக செய்ய முடியாத நிலையும,; ஒரு பதற்றமான சூழ்நிலையினையும் உருவாக்கியுள்ளது. இதனை நான் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் என்ற வைகையில் வண்மையாக கண்டிக்கின்றோம்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணயை துரிதமாக முன்னெடுத்து சம்மந்நதப்பட்ட சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதனை நாங்கள் எமது கிராம உத்தியோகஸ்தர்களது தாய்ச்சங்கத்துடன் இணைந்து கண்காணிப்போம்.

இதற்கு நீதி வேண்டும் என்பதற்காகத்தான் இன்று புதன் கிழமை போராட்டம் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கறுப்பபட்டியணிந்து அமைதியாக எங்களுடைய கவனஈர்ப்பு நடவடிக்கையை பிரதேச செயலக ரீதியாக  முன்னெடுத்துள்ளோம். என அகில இலங்கை ஐக்கிய கிராம சேவை உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்த தலைவர் எஸ்.ஞானசிறி இதன்போது தெரிவித்தார்.


























SHARE

Author: verified_user

0 Comments: