மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை 22.04.2016 பிற்பகல் 2.30 மணிக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக
பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள், ஏறாவூர் நகர சபையின் ஊடான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட பிரதேச மட்ட பல்வேறு அபிவிருத்திகள் பற்றி இக்கூட்டத்தில் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படவும் அங்கீகரிக்கவும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, எஸ். எஸ். வியாழேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment