திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள –அலஸ்தோட்டம் பகுதியில் பனம் பொருள் விற்பனை நிலையம் ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இயற்கையாகவே பனை மரங்கள் அதிகளவில் காணப்படுவதால் அவற்றிலிருந்து அதிகூடிய உற்பத்திகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கு குறிப்பாக குடிசைக் கைத்தொழிலாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இந்த நிலையம் சிறந்த வாய்ப்பையளிக்கும் என அந்தப் பகுதியின் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி சிவலிங்கம் சாந்தா தெரிவித்தார்.
ஐஒஎம் எனப்படும் சர்வதேச புலம்பெயர்தலுக்கான நிறுவனத்தின் அனுசரணையோடு இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அதிகாரிகள், ஐஒஎம் சர்வதேச புலம்பெயர்தலுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment