23 Apr 2016

கிராமசேவை உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் விசேட விசாரணைக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டகாரரிடம் உறுதியளித்துள்ளனர்

SHARE
 கிராமசேவை உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் விசேட விசாரணைக்குழு வொன்று அமைக்ப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து மாவட்த்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்திட்சகரிடம் முன்வைக்கவுள்தாக ஆர்ப்பாட்டகாரரிடம் உறுதியளித்துள்ளனர்
கிராம சேவை உத்தியோகத்தரின் கொலைச்சம்பவம் தொடர்பில் நடைபெற்ற கனஈர்ப்பு போராட்டத்தினை கேள்வியுற்று அவ்விடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா ஆகியோர் ஒன்றினைந்தே இந்த உறுதிமொழியை ஆர்ப்பாட்டகாரரிடம் வழங்கியிருந்தனர்.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் செல்கின்றது இதில் நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றோம். இக் கொலைக்குரிய சூத்திரதாரிகள் எக்காரணம் கொண்டும் தப்பிக்கக் கூடாது, கிராம சேவை உத்தியோகத்தராகிய நாங்கள் பொலிசாருடன் இணைந்தே வேலை செய்துகொண்டு கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு அநீதிஇளைக்கப்பட்டால் எதிர்காலங்களில் சிவில் பாதுகாப்பு குழுங்களில் பங்குபற்றி பணியாற்றுவதினை நாங்கள் நிறுத்திக் கொள்வோம.; என்றெல்லாம் கிராமசேவை உத்தியோகத்தர் எடுத்தியம்பியதையடுத்தே நாங்கள் நேரில் சென்று இந்த கோரிக்கையை உடனடியாக மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரிடம் முன்வைப்போம்  என உறுதியளித்தனர்





  
SHARE

Author: verified_user

0 Comments: