மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவி வளங்களை நீடித்து நிலைக்கும் வாழ்வாதாரத்திற்காகப் பாதுகாத்தல் சம்பந்தமான விழிப்புணர்வுச்; செயலமர்வு செவ்வாய்க் கிழமை (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காலை 10.30 மணிக்கு இடம்பெறுமென மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் அறிவித்துள்ளார்.
பாம் சமூக அபிவிருத்தி சேவைகள் கம்பனி (PALM Community
Development Services Company) அனுசரணையில் இச் செயலமர்வு இடம்பெறுகிறது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்கள், வாவி, நீரியல் வளம், சுற்றுச் சூழல், மீன் பிடித் திணைக்கள அதிகாரிகள், களப்பு மீனவ முகாமைத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்களும் பங்குபற்றுகின்றனர்.
பாம் நிறுவனம் உள்ளுர் சமூகங்களையும் ஆர்வக் குழுக்களையும் இணைத்து வாவி வளங்களை நீடித்து நிலைக்கும் வகையில் வாழ்வாதாரத்திற்காகப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment