அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில ஈடுபட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பிரசேத்தில் இரு இடங்களில் போதை தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது அனுமதிப் பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்த இவர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்த அனுமதி பத்திரமில்லாத பெருமளவு சாராய போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment