24 Apr 2016

50 மாதிரி வீடுகளின் கட்டுமானப் பணிகளில் குறைபாடுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரடியாகச் சென்று பார்வை

SHARE
ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை அத்துப்பட்டிக் கிராமத்தில் அங்கு குடியமர்ந்துள்ள வறிய குடும்பங்களுக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமை தாங்கும் ஹிறா நிறுவனத்தினால் கட்டப்பட்டு வரும் 50 மாதிரி வீட்டுத் தொகுதி நிர்மாண வேலைகளில் குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் அமைச்சரிடம் முறையிட்டதை அடுத்து சனிக்கிழமை அங்கு சென்ற அமைச்சர் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
இவ்வீட்டுத் தொகுதிகளின் கட்டுமானப் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்களும் சமூநல ஆர்வலர்களும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த விடயத்தில் உடனடியாக கரிசனை எடுத்துக் கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னறிவித்தலின்றி அத்துப்பட்டிக் கிராமத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு மக்கள் சுட்டிக் காட்டிய குறைபாடுகளை மக்களுடன் கலந்துரையாடி நேரடியாக கண்டு கொண்டு வீட்டு நிர்மாண வேலைகளில் ஈடுபடும் தரப்பினருக்கு இந்தக் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் 05 ஆம் திகதி புனித றமழான் நோன்பு ஆரம்பமாவதற்கிடையில் வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்குமாறும் அவர் அலுவலர்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: