27 Apr 2016

காத்தான்குடி பொதுமைதானத்தை புனரமைப்பதற்காக விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் ஹரீஸ் 20 லட்சம் ரூபாநிதி ஒதுக்கீடு

SHARE
கிழக்குமாகாண சபை உறுப்பினர்பொறியியலாளர் ஷிப்லிபாறூக்கின் பூரண அனுசரணையில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கினால் நாடத்தப்பட்ட அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹ்மத் லப்பைநியபகார்த்தயு
பிரிவு கழகங்களுக்கிடையிலான 2016ஆம் ஆண்டுக்கான நொக் அவுட் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக் கிமை (24) காத்தான்குடி மத்தியகல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போதுபிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லிபாறூக் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்… இக்கால்ப்பந்தாட்டப்  போட்டியியை நடாத்துவதற்கு என்னிடம் அனுசரணைகேட்ட சகோதரர்கள் இத்தொடரை எனதுபெயரிலோ அல்லது எனது குடும்பத்தவர்களின் பெயரிலோ நடத்துவதற்கு என்னிடம் அனுமதிகேட்டனர் இருப்பினும் எமது ஊருக்காக பல்வேறு சேவைகளையும், தியாகங்களையும் செய்து பயங்கரவாதம் எமது பகுதியில் உச்சகட்டத்தில் இருந்த காலப்பகுதிகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் போன்று எமது ஊரைகட்டிக்காத்து இவ்வூருக்காக வேதனது உயிரையும் தியாகம் செய்த மாமனிதர் அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹ்மத் லப்பை அவர்களையும் அவர்களின் அளப்பரிய சேவைகளையும் நினைவுபடுத்தும் வகையில் அவர்களின் பெயரில் நடாத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே இத்தொடர் இரண்டாவது முறையாகவும் அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை அவர்களின் பெயரில் சிறப்பாக நாடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

எமது ஊரைபொறுத்தவரையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் வெறுமெனே பொழுது போக்கிற்காக மாத்திரம் விளையாடப்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறிவருகின்றது. அந்த நிலைமை மாறவேண்டும் இங்கே பலதிறமையான வீரர்கள் உள்ளனர். இத்தகையவீரர்கள் இவ்வாறான உள்ளுர் விளையாட்டுப் போட்டிகளோடு மாத்திரம் நின்றுவிடாமல் மாவட்ட மட்டத்திலும், மாகாணமட்டத்திலும், தேசியமட்டத்திலும் பல்வேறுசாதனைகளை நிகழ்த்தி எமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இருப்பினும் பலதிறமையான வீரர்கள் தொடர்ந்தும் விளையாடி தமதுதிறமைகளை வெளிக்காட்ட அவர்களின் குடும்ப பொருளாதார நிலை அவர்களுக்குதடையாக அமைகின்றது. எனவே இதற்காகநாம் ஒருதிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அதாவது இவ்வாறன இளைஞர்களுக்கு அரசினூடாக அல்லது தனியார்துறைய ஊடாக நிரந்தர தொழில் ஒன்றை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்பதற்கும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அதேபோன்று எமது ஊரில் உள்ள ஒரே ஒரு பொதுமைதானமான காத்தான்குடி பொதுமைதானம் தற்போது விளையாடுவதற்கு முடியாத அளவிற்கு மோசமான ஒருநிலையில் காணப்படுகின்றது. 

எனவே அந்த மைதானத்தை புனரமைப்பதற்காக வேண்டி விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் ஹரீஸ் அவர்களிடம் கேட்டபோது அதற்காக 20 லட்சம் ரூபாநிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கியிருக்கின்றார். எனவே மிகவிரைவில் மைதானத்தை புனரமைத்து அதனைஎமது இளைஞர்கள் விளையாடுவதற்காக வழங்கவிருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல் விரைவில் விளையாட்டுத் துறை பிரதிஅமைச்சர் ஹரீஸ் அவர்களை அழைத்து வந்துவிளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்றையும் நடாத்த விருக்கின்றோம். தற்போது மிகவும் ஒரு உஷ்ணமான காலநிலை நிலவுவதால் ஒருபொருத்தமான சந்தர்பத்தில் அந்த விளையாட்டுப் போட்டித் தொடரை நடாத்த திட்டமிட்டிருக்கின்றோம். அதன் மூலம் எமது வீரர்கள் நேரடியாக பிரதி அமைச்சரை சந்தித்து எங்களுடைய விளையாட்டு துறைசார்ந்த தேவைகளை அவரிடம் எடுத்துக்கூறி விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் அவரால் எமது ஊருக்கு என்னென்ன சேவைகளை செய்யமுடியுமோ அவற்றை யெல்லாம் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம் என்று தெரிவித்தார்.  











SHARE

Author: verified_user

0 Comments: