23 Mar 2016

ஏழை மக்களும் பள்ளிவாசல்களுக்கு உதவ முன்வரவேண்டும் -- ஆரிப் சம்சுத்தீன்

SHARE
(டிலா)

ஏழை மக்களும் பள்ளிவாசல்களுக்கு உதவ முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் தெரிவித்தார்.
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் 9வது கட்டுமானப்பணி ஞாயிற்றுக்கிழமை (20) பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். சக்காப் தலைமையில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பள்ளிவாசல்களுக்கு பணகாரர்கள் தான் உதவ வேண்டும் என கருதுகின்றனர். இது பிழையான சிந்தனையாகும். பபுள்ளிவாசல்களுக்கு பணம் கொடுத்துத்தான் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றில்லை. ஏழைகள் பள்ளிவாசல்களில் சிரமதானப் பணிகளை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்துக்கும்-பள்ளிவாசல்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரிக்கும். இன்று வசதி குறைந்தவர்கள் பள்ளிவாசல்களின் அபிவிருத்தி செயற்பாடுகளிலிருந்து விலகிச்செல்லும் நிலையை காணக்கூடியதாக உள்ளது. பள்ளிவாசல் என்பது இறைவனின் இல்லமாகும் எனவே பள்ளிவாசல்களுக்கு உதவ மனவிருப்பத்துடன் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது பள்ளிவாசலின் 9வது கட்டுமானப்பணிகளுக்காக 150000.00 ரூபாவை மாகாணசபை உறுப்பினர் பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கையளித்தார். நிகழ்வுக்கு  கௌரவ அதிதியாக இல்ஹாம் மசூர் மௌலானா கலந்துகொண்டதுடன் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, பொருளாளர் ஏ.எம்.அலியார், மௌலவி எம்.ஐ.குசைனுத்தீன், செயலாளர். ஐ.எல்.நூறுல் பொளஸ், அதிபர் ஏ.ஆர். ஹசீப்,  சோனகர் சங்கத்தின் மருதமுனைக் கிளையின் தலைவர் ஏ.கையும் உட்பட ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: