தேசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பங்குபற்றி பதக்கங்கள் பெற்ற, பங்கு பற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை பகல் (09) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய பரா ஒலிம்பிக் சம்மேளனமும், மாவட்ட செயலகமும் இணைந்து இந்த கௌரவிப்பினை நடத்தின.
மட்டக்கப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய பரா ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் யு.கே.றொட்ரிக்கோ, உப தலைவர் புஸ்பா ராமநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய பரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜனவரி 21ஆம் தகதி முதல் 23ஆம் திகதி முதல் டியகமவிலுள்ள மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 58பேர் பங்குபற்றினர். இதில் 11பேர் இரண்டு தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்றிருந்தனர்.
இதில், கண்பார்வை குறைந்த வர்களுக்கான நீளம் பாய்தல், பரிதி வட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லப்பட்டுள்ளது.
முழங்காலுக்குகீழ் காலில்லாதவர்களுக்கான பரிதிவட்டம் வீசுதல், ஈட்டி எறிதல், குண்டெறிதல், iகில்லாதவர்களுக்களுக்கான 100 மீட்டர் ஓட்டம், கண்பார்வை குறைந்தவர்களுக்கான 200 மீட்டர் ஓட்டம், கண்பார்வை குறைந்தவர்களுக்கான நீளம் பாய்தல், உள்pட்ட பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன.
மாவட்ட செலயகத்தின் வழிகாட்டலில், சமூக சேவைகள் திணைக்களம். கமிட் நிறுவனம் ஆகியன இந்த விளையாட்டுப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகளை தயார் படுத்தி அழைத்துச் சென்றது. இவர்களுக்கான பயிற்சியாளராக அபிவிருத்தி அதிகாரி த.விநாயகமூர்த்தி செயற்பட்டிருந்தார்.
மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியொகத்தர் எஸ.அருள்மொழி, மாவட்ட உத்தியோகத்தர் செல்வநாயகம், உள்ளிட்ட பலரும் இந்த செயற்பாட்டில் உழைத்திருந்தனர்.
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றொர் பாடசாலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment