26 Mar 2016

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் செயற்படவேண்டும்- நடா

SHARE
கடந்த காலங்களில் பட்டதாரி ஆசிரியர்களாக ஆசிரிய சேவையில் உள்வாங்கப்பட்ட பல  பட்டதாரி ஆசிரியர்கள் பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட பாடங்களில் விசேட
தகைமைகளைப் பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

அவர்கள் பாடசாலைகளில் இணைந்தபோது ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்வாங்கப் பட்டிருந்தும், அந்தக் கலங்களில், பாடசாலைகளில் அவர்களுக்குரிய குறித்த பாடங்களின் ஆசிரியர்கள் இன்மையால், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும், அதிபர்களினால், குறித்த ஆசிரியர்களின் விசேட பாடங்களில் பல்கலைக் கழகத்தில் பற்ற பட்டத்தில் அடிப்படையில், சேவைகளுக்கு அமர்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா  வெள்ளிக் கிழமை (25) தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து கிழக்கு மாகாண சபைக்கு தான் அறிவித்துள்ளதாகக் குறிப்பிடும் அவர்,

கடந்த காலங்களில், குறித்த பாடங்களுக்கான பயிற்சிகளும், கல்வித் திணைக்கத்தினால் தெரிவு செய்யப்பட்டு, பல பயிற்சிகளையும், அக்;குறிப்பிட்ட ஆசிரியர்கள், பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாது, உடனடியாக அவர்களுக்கு, ஏற்கனவே வடங்கப்பட்ட கட்டளைகளின் நிமிர்த்தம், ஆரம்பப் பிரிவு கற்பிப்பதற்கான ஆணை பிறப்பிக் கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி ஆசிரியர்களின் திறனைக் எமது மாணவர்கள் பெறும் நோக்கில், எமது பகுதிகளிலிருக்கின்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்கும் நோக்கிலும், இவர்களை கடந்த காலங்களில் கற்பித்த பாடங்களுக்கான ஆசிரியர்களாக இணைத்து கொள்ளும்படியும்,  கிழக்கு மாகாண சபையைக் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: