2015ம் ஆண்டில் நடாத்தப்பட்ட இலங்கை கணக்காய்வு சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்று (All Island First Rank) கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) அஸனார் முஹம்மது மாஹிர் என்பவர் நியமனம் பெற்றுள்ளார்.
கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களத்தில் இவர் தனது கடமைகளை உத்தியோhகபூர்வமாக 2016.03.01 இல் இருந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் 1999ம் ஆண்டில் இருந்து கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களத்தின் சிரேஷ்ட கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி வந்துள்ளார்.
தனது முதல் பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக் கொண்ட இவர் அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணிப் பட்டப்பின்படிப்பை (Master Degree) ஆங்கில மொழி மூலம் மேற்கொண்டு அதி விசேட சித்தியை (Merit) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக் கொண்டார்.
தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் முறையே ஆங்கில மொழி டிப்ளோமா மற்றும் உயர்தர ஆங்கில மொழிச் சான்றிதழ் பட்டங்களையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம் மற்றும் சான்றுப்படுத்திய தொழில்சார் முகாமையாளர் நிறுவனங்களின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றுகின்றார். இவர் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மர்ஹ{ம் அஸனார் ஆசிரியர் மற்றும் ஹாஜியானி முஹம்மது நாச்சி அவர்களின் கனிஷ்ட புதல்வராவார்.
மெத்தைப்பள்ளி, ஹிழுறியா வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
0 Comments:
Post a Comment