திறமையாளர்களை கெளரவிப்பது நல்ல பண்பாகும்.இந்தப்பண்புகளை நமது சமூகத்தில் வளர்க்க வேண்டும். தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என்று மொழிக்கல்வியின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. நமது நாட்டில் அவசியமான மொழிகளை நாம் கற்று அதில் பாண்டியத்துவம் அடைய வேண்டும். அது நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்
அமீர் அலி தெரிவித்தார். கிண்ணியா நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஹில்மி மஹ்ரூப்பின் ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற திறமையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும்போது பிரதியமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர்.
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை வழங்கியுள்ளான் அந்தத் திறமையை இணங்கண்டு நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்,உங்களை உங்கள் பெற்றோர்கள் நம்புகின்றார்கள் அந்த நம்பிக்கையை வீண்டித்து அவர்களுக்கு மன உளைச்சலை வழ்ங்குகின்றவர்களாக நீங்கள் இருக்கக் கூடாது.இந்த பிரதேசத்தில் நீங்கள் சிறந்த கல்வியாளர்களாக உறுவாக வேண்டும், நமது சமூகத்திற்கு இன்றைய அத்தியவசியதேவை கல்வியாளர்களே. ஒரு நல்ல வைத்தியர்,நல்ல பொறியியலாளர்,நல்ல அதிபர்,நல்ல ஆசிரியர்,நல்ல சட்டத்தரணி,நல்ல அரசியல்வாதி இந்த சமூகத்தின் அத்தியவசியதேவைகள் ஆகும்.
இந்த சமூகத்தின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் தான் நாங்கள் மஹிந்த ராஜபக்ச எனும் யாரும் வீழ்த்த முடியாது என்று நினைத்த பெரிய சக்தியை விட்டு விழகி நல்லாட்சியின் பங்குதாரர்களாக மாறினோம். எங்கள் பெண்களின் பர்தாக்களை பாதுகாக்கவும்,எங்கள் ஆண்களின் தொப்பிகளை பாதுகாக்கவும், எங்கள் பள்ளிவாயல்களையும்,பாடசாலைகளையும்,காணிகளையும் பாதுகாக்கவும்,எங்கள் சமூகத்தின் மீதான அவதூறுகளை இல்லாமல் ஒழிக்கவும்,நமது பூர்வீகப்பூமியில் பாதுகாப்புடனான நிம்மதியான வாழ்வை உறுதிப்படுத்தவுமே நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரிந்து வந்தோம்.
அவருடன் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இருக்கவில்லை.அவரிடம் இனவாதிகளிடமிருந்து எமது சமூகத்தை பாதுகாத்து தாருங்கள் என்ற விண்ணப்பத்தினை முன்வைத்தோம். எமது சமூகத்தின் சொத்துகளுக்கும்,இன்னும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தைக் கேட்டோம் அதுவும் கிடைக்கவில்லை.அப்படியென்றால் தொடர்ந்தும் அவரோடு ஒட்டிக்கொண்டு இருப்பது எமது சமூகத்தை ஏமாற்றும் செயல் என நாங்கள் முடிவெடுத்து நல்லாட்சியை அமைப்பதில் பங்காளிகளா ஆனோம். மகிந்த ராஜபக்ச எனும் யாரும் அஅசைக்க முடியாது என்று நினைத்த அந்த இரும்பு மனிதனை நாங்கள் பகைத்துக் கொண்டதன் காரணமாக, நாங்கள்,எங்கள் குடும்பங்கள் அனைவரும் தேர்தல் முடியுமட்டும் உயிர் அச்சுறுத்தலுக்கு உற்பட்டோம்.இந்த வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.எங்கள் உயிர்களையும்,உடமைகளையும் பணயம் வைத்துத்தான் நாங்கள் காலத்திலே இறங்கினோம். அதில் எங்கள் சுயநலம் எதுவும் இருக்கவில்லை என்பதை எல்லாம்வல்ல இறைவன் நன்கு அறிவான் எனக்கூறினார்
0 Comments:
Post a Comment