மட்டக்களப்பு கரையாக்கன்தீவு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வரடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவும்இ பரிவார மூர்த்தியாகிய வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானின் ஆவர்த்தன கும்பாபிஷேகமும் பதன்கிழமை (16) பூர்வாங்கக் கிரியைகளுடன் ஆரம்பமானது. இந்நிலையில் புதன்கிழமை (23) தீர்த்தோற்சவத்துடன் அலங்கார உற்சவம் நிறைவு பெறுகின்றது.
கிரியா கால நிகழ்வுகளாக 17 ம் திகதி வியாழக்கிழமை எண்ணெய்க் காப்பு நிகழ்வும். 18 ம் திகதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகமும் இடம் பெற்றன. தொடர்ந்து இரவு இ காலைப் பூசைகள் இடம் பெற்று 23ம் திகதி இடம் பெறவுள்ள பொன்னூஞ்சல் பாடலுடன் கூடிய பக்தி பாமாலையுடன் தீர்த்தோற்சவம் இடம் பெறவுள்ளன.
திருவிழா காலங்களில் தினமும் சுவாமி உள்இ வெளி வீதி உலா வருவதுடன் இரவு வேளைகளில் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது. கிரியைகள் யாவும் கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ நவரெத்தின முரசொலிமாற குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment