(அஷ்ரப் ஏ சமத்)
ரதமா் ரணில் விக்கிரமசிங்க அப்போது கல்வியமைச்சராக இருந்த காலத்திலேயே ஆசிரியா்கள், அதிபா்களும் இலங்கை கல்வி நிருவாக உத்தியோகத்தா்கள் வருவதற்கான திட்டத்தினை அறிமுகப்படுத்தினாா். தற்போது இலங்கையில் கல்வி நிருவாக சேவையில் 600 க்கும் மேற்பட்ட கல்வி நிருவாக அதிகாரிகள் கல்வியமைச்சிலும், கல்வித் திணைக்களங்கள், மாகாண கல்வித் திணைக்களங்கள் படாசாலைகளிலும் நிருவாக அதிபா்களாகும் செயல்பட்டு வருகின்றனா்.
ஆகவே கல்வி அமைச்சில் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு உரிய சிரேஸ்ட உயா் பதவிநிலைப் பதவிகளும் எதிா்காலத்தில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய கல்வித் திட்டத்தினை கொண்டு செல்வதற்கு என்னோடு சோ்ந்து இலங்கை கல்வி நிருவாக சேவைகள் சங்க உறுப்பிணா்களும் எனக்கு ஒத்துழைப்பு நல்குதல் வேண்டு்ம். அடுத்த 5 ஆண்டுக்களுக்குள் இந்த நாட்டில் ஒரு பாரிய கல்விப் புரட்சியை என்னால் ஏற்படுத்த முடியும். என கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் தெரவித்தாா்.
இலங்கை கல்வி நிருவாக உத்தியோகத்தா்கள் சங்கத்தின் வருடாந்த கூட்டம் நேற்று (4) மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்வாண்மையாளா்களின் சங்கத்தின் தலைவரும் ,கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளருமான ஜ.எம். இலங்கசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வியமைச்சா் அகில விராஜ் காரியவாசமும் இராஜாங்க அமைச்சா் இராதாக் கிருஸ்னன், கல்வியமைச்சின் செயலாளா், கல்வியமைச்சின் கீழ் வருகின்ற ஆணையாளா்கள் மாகாண மற்றும் கல்வி நிறுவாக சேவை உத்தியோகத்தா்களும் கலந்து கொண்டனா்.
அங்கு தொடா்ந்து உரையாற்றிய கல்வியமைச்சா்
நமது நாட்டில் தற்போதைய கல்விமுறையில் வருடாந்தம் இலச்சக்கணக்கானனோா் கலைத்துறை, சங்கீதம், நாட்டியம்,மதரீதியான பாடங்களை கற்பித்து பட்டதாரிகளாக்குகின்றோம். இந்த பட்டத்தினால் எமது நாட்டுக்கு எவ்வித பலனும் இல்லை. இக் கல்விமுறையினால் எமது இளம் சமுதாயத்தினா் எவ் வழியிலும் முன்னேற்றத்தினை அடைய முடியாது. இம் மாணவா்களும் உலகில் உள்ள கல்விமுறைக்கு போட்டியிட முடியாது. ஜரோப்பிய நாடுகளில் உள்ள கல்விமுறையிலான வா்த்தகம், சந்தைப்படுத்துதல் முகாமைத்துவம் பொருளாதாரம். தொழில் நுட்ப பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி போன்ற துறைகளுக்கு நமது மாணவ சமுதாயத்தினரை தயாா் படுத்துதல் வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின் வரும் இளைஞா்கள் தமது நாட்டில் இல்லாவிட்டாலும் உலகில் எங்காயவது ஒரு நாட்டுக்கு சென்று தன்னை தயாா்படுத்திக் கொண்டு கல்வியலாளா்களாக வளா்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்திற்கு சிறிது தாக்குப் பிடிப்பாா்கள். ஆகவே இந்த கல்வி மாற்றத்தினை கொண்டுவர என்னால் மட்டும் செயல்படுத்த முடியாது ஆகவே இங்கு உள்ள 600 இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கைகளிலேயேயும் தங்கியுள்ளது.
தங்களது 15க்கும் மேற்பட்ட கோரிக்கைகளான பதவி நிலை மற்றும் நிர்வாகம், சம்பளஉயா்வுகள் , பதவி உயா்வு, வெளிநாட்டு சுற்றுலா, புலமைப்பரிசில் உங்களது பிள்ளைகளின் பாடசாலை அனுமதி போன்ற வற்றினை தங்களோடு இணைந்து உடன் கவணத்திற்கு எடுக்கப்படும். அதற்காக பிரதாம் ரணி்ல் விக்கிரமசிங்க அவா்கள் நிச்சயம் உதவியளிப்பாா்.
ஒவ்வொரு புதன்கிழமையும் கல்வியமைச்சசுக்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகின்றாா்கள் அவா்களில் 90 வீதமானோா் தமது பிள்ளைகளின் பாடசாலை அனுமதிக்கு அமைச்சரிடமும் சிபாா்சு கடிதம் கேட்டு வருகின்றனா். இதற்காக நானும் கல்வியதிகாரிகளும் காலத்தினை கடத்த வேண்டாம். அவ்வாறானவா்களுக்கு கடிதம் வழங்க வேண்டாம். அதற்காகவே ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் சிறந்த பாடசாலைத் திட்டம் உருவாக்கப்ட்டு வருகின்றது. மகாண கல்வி மத்திய கல்வி தேசிய பாடசாலைகள் என பிரிக்காமால் சகலரும் ஒன்று சோ்ந்து செயல்படுவதற்கே அண்மையில் 9 மாகாண முதலமைச்சா்களையும் அழைத்து கல்வியமைச்சுடன் சோ்ந்து செயலாற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளேன் என கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாம் அங்கு உரையாற்றினாா்.
கல்வி இராஜாங்க அமைச்சா் இராதக் கிருஸ்னன் உரையாற்றுகையில் -
இந்த கல்வி நிர்வாக சேவையில் மலையக கல்வி ஆசிரியா்களையும் நிர்வாக சேவைக்கு கூடுதலாக சோ்த்துக் கொள்ளுங்கள். கடந்த 30 வருட காலத்தில் 2 வீதத்திற்கும் குறைவானவா்களே இத்துறையில் உள்ளதாகவும் அவா் கூறினாா். இங்கு வகுப்பு 1,11,111 ஆக இருந்தாலும் சகலரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் . நமது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியும்.
0 Comments:
Post a Comment