17 Mar 2016

கலாநிதி சிராஸ் மீராசாஹிப் - பதவி விலகினார்

SHARE
(டிலா)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அப்பதவிகளிலிருந்து இராஜினமாச் செய்துள்ளார்.
இது தொடர்பான தனது முடிவை எழுத்து மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும் செயலாளருக்கும் திங்கட்கிழமை  (14) அறிவித்துள்ளதாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் எழுவான் நியூஸ்க்கு தெரிவித்தார்.

அ.இ.ம.காங்கிரஸின் பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீலுக்கும் தனக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து  மேற்படி முடிவை எடுக்கத் தான் தீர்மானித்தாகவும் அவர் கூறினார். தனது பதவி விலகல் தொடர்பாக விரைவில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளேன் என்றார். முஸ்லிம் காங்கிறஸ் தேசிய மாநாட்டின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் மீண்டும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது, தற்போது எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் கிடையாது. அது பற்றி பின்னர் யோசிக்க வேண்டும் எனக் கூறினார்.

இவர் ஆரம்பகாலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
SHARE

Author: verified_user

0 Comments: