3 Mar 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணி மலேசியாவில்

SHARE
இளைஞர் தொழினுட்ப அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணி மலேசியா சென்றுள்ளது.
இந்தக் குழுவின்  மலேசிய விஜயத்தின் முதல் நிகழ்வாக ஆளும் கட்சியான UMNO வின்  செயலாளர் நாயகம்  அத்னான் பன் தெங்கு மன்சூர் அவர்களுக்கும் முகாவின் தூதுக்குளிவினருக்கும் இடையிலான சந்திப்பு, உம்போ தலைமை பயிற்சியகத்தில்  வியாழக்கிழமை 03.03.2016 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், தூதுக்குளுவின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,  மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன், கட்சியின் ஏனைய தூதுகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: